இலாபம் சம்பாதிக்கணும்னு உங்க ஆயுசைக் குறைச்சுக்குவீங்களா?
நம்மாழ்வார்!
”அரவிந்தர் ஆசிரமம் பண்ணையில ஒரு பயிற்சிக்குப் போயிருந்தப்ப, அங்கே வெளிநாட்டில் இருந்து ஒரு பெண்மணி வந்திருந்தாங்க. நாள் முழுக்க பண்ணையைச் சுத்திப் பார்த்துட்டு சாப்பிட உக்காந்தாங்க. தட்டுல சாதம் வெச்சுக் குழம்பு, காய்கறின்னு பரிமாறினாங்க. எல்லாத்தையும் பார்த்தவங்க, ‘நான் சாப்பாடு கேட்டா ஏன் விஷம் தர்றீங்க’ன்னு கேட்டாங்க. எல்லாருக்கும் திக்னு தூக்கி வாரிப் போட்டுச்சு.
பண்ணைக்குத் தேவையான சாமான்லாம் வாங்குற நோட்டைப் பிரிச்சு ‘யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ், நோக்ரான், டெமக்ரான்’னு வரிசையா வாசிக்குறாங்க. ‘இதெல்லாம் என்ன? விஷம்தானே! அதெல்லாத்தையும் எங்கே போடுறீங்க… பண்ணையிலதானே! அப்ப இது விஷம் கலந்த சாப்பாடுதானே!’ன்னு கேட்டாங்க.
அப்படிலாம் நாங்க யோசிச்சதே இல்லை. ‘லாபம் சம்பாதிக்கணும்னு உங்க ஆயுசைக் குறைச்சுக்குவீங்களா? அப்ப இங்கே மனிதர்கள் சாப்புடுறதுக்குன்னு நீங்க எதுவுமே விளைய வைக்கிறது இல்லையா?’ன்னு கேட்டாங்க அந்தப் பெண்மணி.
‘இயற்கை விவசாயம்’னு ஓர் எண்ணம் எனக்குள்ள உதிச்சது அந்த நாள்லதான். அதன்பிறகுதான் இயற்கை விவசாயம் தொடர்பா அத்தனை சங்கதிக¬ளயும் தெரிஞ்சுக்கத் தேடித் திரிய ஆரம்பிச்சேன்” என்று நம்மாழ்வார் தெரிவித்தார்.