காய்ப்புழுவின் அறிகுறிகள்:
இளம்புழுக்கள் இளந்துளிர்களை உன்னும்
முதிர்ந்தபுழுக்கள் வட்டவடிவில் காய்களில் துளையிடும்.
இப்புழுக்கள் காயிணைத் துளைத்து தலைப்பகுதியை உட்செலுத்தி உடலின் பாதிப்பின் பகுதியை வெளியே வைத்தக்கொண்டு சாப்பிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
தாக்கப்பட்ட பழங்கள் மற்றும் வளர்ந்த புழுக்களையும் சேகரித்து அழிக்கவும்.
நாற்பது நாள் வயதுள்ள ஆப்ரிக்கன் உயர சாமந்தி பூச்செடிகளை கவர்ச்சிப்பயிராக 10 வரிசை தக்காளிசெடிக்கு 1 வரிவை பூச்செடி பயிரிடலாம்.
இனக்கவர்ச்சிப் பொறி ஹெலியூர் ஹெக்டேர்க்கு 15 வைக்கவும்.
முட்டை ஒட்டுண்ணிப்பான ட்ரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 50,000 எனும் அளவில் வாரம் ஒரு முறையாக 6 முறை விடவேண்டும்.
கிரைசோப்பெர்லா கார்னியா எனும் இரை விழுங்கிப் âச்சிகளை நட்ட 30 – ம் – நாள் முதல் வாரம் ஒரு முறை 50,000 முட்டைகள் அல்லது புழுக்களை விட வேண்டும்.
ஹெலிகோவெர்பா நிäக்ளியர் பாலிஹிட்ரோசிஸ் வைரஸ் [எச்.எ.என்.பி.வி ] திரவத்தினை ஹெக்டேருக்கு 500 புழு சமன் அளவுடன் பருத்தி விதை எண்ணெய் ஹெக்டேருக்கு 300 கிராம் அளவில் மாலை நேரத்தில் தெளிக்கவும்.
கார்பரில் 2 கிராம் / லிட்டர் அல்லது பெசில்லஸ் துருஞ்ஐியென்சிஸ் 2 கிராம் / லிட்டர் அளவில் தெளிக்கவும்.காய்கள் கனிந்ததற்கு பிறகு பூச்சிக்கொல்லிகளை தெளிக்கக்கூடாது.