வாழை மரத்திலுள்ள காய்களை தாக்கும் பேன் பூச்சிகளை ஒழிக்க வழிகள்…

 |  First Published Sep 4, 2017, 11:55 AM IST
Ways to eradicate bananas that attack banana ...



வாழை மரத்திலுள்ள காய்களை இரண்டு வகையான பேன்கள் தாக்குகின்றன.

1. பூவைத் தாக்கும் பேன், 2. வாழைப்பழத் தோலில் காயம் ஏற்படுத்தும் பேன்.

Latest Videos

undefined

மிகச்சிறிய காய்களை பூப்பேன் தாக்குகிறது. சிறு காயங்களிலிருந்து சாற்றை உறிஞ்சுவதால் காய்களின் பரப்பில் சிறிய சிவப்புநிற புள்ளிகள் நாளடைவில் வளர்ந்து கறுப்பு நிற புள்ளிகளாக மாறிவிடும்.

பூ பேன் தாக்கும் ரகங்கள் 

பூவன், நேந்திரன், கற்பூரவல்லி இரகங்களிலும், ரஸ்ட் காய்ப்பேன் சபா, மொந்தன், கற்பூரவல்லி, ரஸ்தாளி ஆகிய இரகங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பூ வெளிவந்தவுடன் மாலை நேரத்தில் குளோர்பைரிபாஸ் 20 உஇ மருந்தினை லிட்டருக்கு 2.5மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும். இதனை கடைசி சீப்பு வெளிவந்த 2-15 தினங்களுக்குள் தெளித்தல் அவசியம்.

ரஸ்ட் காய்ப்பேன் – காய்களின் மேற்தோலினை சுரண்டி சாற்றை உறிஞ்சுவதால் மற்றும் முட்டை இடுவதாலும் விரிசல் ஏற்பட்டது போன்ற காய்கள் காணப்படும்.

ஒருங்கிணைந்த கட்டுப்பாடு

வறட்சி நிலையாக குறைத்து போதுமான அளவு நீர்பாய்ச்சுவதால் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.

அனைத்து சீப்புகளும் வெளிவந்த உடனே வாழை ஆண் பூவை வெட்டி விடுதல் அவசியம்.

அல்லது பவேரியா பேசின்னியா 3மிலி, 100மிலி நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

மண்ணில் கார்போபியூரான் 20 கிராம் அளவில் மரத்திற்கு கீழ் இட்டு கட்டுப்படுத்தலாம்.

ஷபாலி புரோபைலீன் பை கொண்டு தாரினை முழுமையாக மூடிவிடலாம்.

குளோர்பைரிபாஸ் மருந்தினை 1 லிட்டர் நீருக்கு 2.5மிலி அளவில் பூ மற்றும் தாரில் தெளிக்கலாம்.

click me!