மஞ்சளுக்கான நிலத்தை எப்படி தேர்வு செய்து பராமரிப்பது?

 |  First Published Apr 4, 2018, 2:25 PM IST
How to Choose and Maintain Land for Yellow



மஞ்சளுக்கான நிலத்தேர்வு மற்றும் நிலப்பராமரிப்பு

** மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் மற்றுமொருமுறை மஞ்சளை பயிரிடக் கூடாது. 

** இவ்வாறு பயிரிட்டால் நூற்புழுத் தாக்குதல் அதிகமாகி பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் வெகுவாகப் பாதிக்கும். 

** அதுபோல் நூற்புழு அதிகம் தாக்கும் வாழை, மிளகாய், தக்காளி, கத்தரி, கனகாம்பரம் சாகுபடி செய்த தோட்டத்தில் மஞ்களைப் பயிரிடக் கூடாது. 

** மாற்றுப் பயிராக கரும்பு, நெல் அல்லது தானியப்பயிர்கள் பயிரிடலாம். பயிர் சுழற்சி செய்வது மிகவும் அவசியம். 

** ஆகவே மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் ஒரு வருடம் இடைவெளிவிட்டு மாற்றுப் பயிர் செய்த பின்பு மஞ்சளைப் பயிரிடலாம். 

** நிலத்தை 3-4 முறை உழ வேண்டும். 

** கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 10 டன் மக்கிய தொழுஉரம் இட வேண்டும் அல்லது 2 டன் மண்புழு உரம் இட வேண்டும். 

** நிலத்தில் சாம்பல் சத்து குறைபாடு இருந்தால் நெல் உமிச் சாம்பல் ஒரு ஏக்கருக்கு 500கிலோ வீதம் (1 டிப்பர்) கடைசி உழவின்போது இடலாம்.
 

click me!