மாடுகளின் வயதை எப்படி கணக்கிடலாம்? இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க…

 |  First Published Jul 28, 2017, 12:58 PM IST
How to calculate cows age



 

மாடுகளின் வயதை அதன் கீழ்த் தாடையிலுள்ள எட்டு நிரந்தர முன் வரிசைப் பற்களின் வளர்ச்சியை வைத்து கணக்கிடலாம். மாடுகளில் நிரந்தரப் பற்களாக் கீழ்தாடையில் 4 ஜோடி அதவாது 8 முன் வரிசைப்பற்கள் இருக்கும், மேல் தாடையில் முன் வரிசைப்பற்கள் இருக்காது.

Tap to resize

Latest Videos

பொதுவாக கலப்பின மாடுகளில்

2 வருட வயதில் மத்திய ஜோடி நிரந்தர முன் வரிசைப் பற்கள் முளைக்கும்.

2 1/2 வருட வயதில் இரண்டாவது ஜோடி நிரந்தர முன் வரிசைப் பற்கள் முளைக்கும்.

3 வருட வயதில் 3 வது ஜோடி பற்களும்

3 1/2 – 4 வருட வயதில் கடைசி ஜோடி நிரந்தர முன்வரிசைப் பற்களும் முளைத்து விடும்.

6 வருட வயதில் இருந்து இப்பற்கள் தேய ஆரம்பிக்கும்.

10 வயது ஆகும் போது எல்லா முன்பற்களுமே தேய்ந்த நிலையில் இருக்கும்.

click me!