மாடுகளுக்கு சினையை எப்படி உறுதி செய்வது? அதற்கென சில முறைகள் இருக்கு...

 |  First Published Feb 9, 2018, 1:45 PM IST
How There are some methods for it ...



மாடுகளுக்கு சினையை உறுதிசெய்யும் முறை...

** ஆசனவாயினுள் கையை செலுத்தி கருப்பையைப் பரிசோதனை செய்து உறுதி செய்தல்; 

** ரத்தத்தில் அல்லது பாலில் உள்ள கணநீரான புரொஜஸ்டிரானை அறிவதன் மூலம் உறுதி செய்தல்; 

** லேப்பராஸ்கோப் என்ற கருவியின் மூலம் உறுதிசெய்தல்; ஸ்கேன் மூலமாகவும் சினை உறுதி செய்தல்; 

** சினை மாடுகளுக்கு கருவில் வளர்கின்ற கன்றின் வளர்ச்சிக்காக ஏழுமாத சினை முதல் உடல் பராமரிப்பும் பால் கொடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு கொடுக்கப்படும் தீவனக் கலவையுடன் 1 - ஒன்றரை கி.கிராம் தீவனமும் அதிகமாக கொடுத்தல் வேண்டும். 

** சினையுற்ற மாடுகள் 7 மாதச்சினை வரை பால் கறப்பதால், சரியான, போதுமான தீவனம் அளிக்கப்பட வேண்டும். இப்பொழுது கருவளர்ச்சி மெதுவாகவே இருப்பதால் கருவளர்ச்சிக்காக அதிகமாகத் தீவனமும் தேவைப்படுவதில்லை. 

** ஆனால் பால் வற்றியபின் கன்று ஈனும் வரை உள்ள இரண்டு அரை மாதச் சினைக் காலத்தில்தான் கரு வேகமாக வளர்கின்றது. ஏறக்குறைய மொத்த வளர்ச்சியில் 80 சதவீத வளர்ச்சி கடைசி இரண்டரை மாதத்தில் தான் நடைபெறுகின்றது. 

** ஆதலின் கரு வளர்ச்சிக்கு அதிகமாக தீவனம் தேவைப்படுகின்றது. மேலும் அது முந்தைய கறவையில் இழந்த உடல் திசுக்களை புதுப்பித்துக் கொள்ள உதவுவதோடு கிடேரிகளில் எலும்பு வளர்ச்சி மாற்றத்திற்கும் இது மிகவும் அவசியமாகும்.

** அவரையினத் தீவனம் இரண்டு பங்கு, புல்லினத் தீவனம் மூன்று பங்கு என்ற விகதத்தில் கலந்து மாடு தின்னும் அளவு அல்லது குறைந்தது நாளைக்கு ஒரு மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனம் அளிப்பதோடு அடர் தீவனத்தையும் அளிக்க வேண்டும். 

** கடைசி 10 நாட்களில் கொடுக்கும் தீவனம் மலமிளக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒன்றரை கிலோ கோதுமைத்தவிடு கொடுப்பது நல்லது. அதிக கொள்ளளவு கொண்ட நார் தீவனங்களை அதிகமாகக் கொடுக்கக்கூடாது. 

** குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுப்பது நல்லது. கன்று ஈனுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித்தூள் ஆகியவற்றை முக்கால் லிட்டர் தண்ணீரில் கலந்து உள்ளுக்குக் கொடுப்பது நல்லது.

click me!