வெள்ளாடுகளுக்கு எவ்வளவு தீவனம் தேவை
வெள்ளாடுகள் உடல் எடையில் 4 முதல் 5% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும். ஆடுகள் சராசரி 25 கிலோ எடையே இருக்கின்றன.
பொலி கிடாக்கள் மற்றும் சமுனாபாரி போன்ற இன ஆடுகளின் எடை கூடுதலாக இருக்கும். ஆகவே, 25 கிலோ ஆட்டிற்கு 1 முதல் 1.25 கிலோ தீவனம் காய்வு நிலையில் தேவைப்படும்.
இதனைப் பசுந்தழை, உலர்ந்த தீவனம், கலப்புத் தீவனமாகக் கீழ் வருமாறு வழங்கலாம்.
காய்வு நிலையில்
பசுந்தழை / புல் 3 கிலோ காய்வு நிலையில் 0.75 கிலோ
உலர் தீவனம் 300 கிராம் காய்வு நிலையில் 0.25 கிலோ
கலப்புத் தீவனம் 250 கிராம் காய்வு நிலையில் 0.24 கிலோ
காய்வு நிலையில் மொத்தம் 1.24 கிலோ
வெள்ளாடுகளுக்கு உகந்த சிறந்த தீவனம்
வேர்க்கடலைக் கொடி
கடலைக்கொடி, கடலை பயிரிடும் தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், ஆடு மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றது. இதுவும் ஒரு சிறப்பு காய்ந்த தீவனமாகும். பயிரில் சிவப்புக் கம்பளிப் புழு தாக்குதல், கடலை உற்பத்தியைப் பாதிப்பதுடன், ஆடுகளுக்குப் பெருந் தீவனப் பஞ்சத்தை உண்டாக்குகின்றது.