முட்டைக் கோழிகளில் எவ்வாறு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது?

 
Published : Nov 16, 2017, 12:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
முட்டைக் கோழிகளில் எவ்வாறு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது?

சுருக்கம்

How do you manage the management of egg shells?

** முட்டைக் கோழிக் கொட்டகையினை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்தல்

** கோழிகளுக்கேற்ற இடவசதி, தீவன வசதி மற்றும் தண்ணீர் வசதி போன்றவற்றை ஆழ்கூள மற்றும் கூண்டு முறை வளர்ப்பில் அளித்தல்

** ஆழ்கூளக் கொட்டகையில் ஒரு கோழிக்கு 2 சதுர அடி இடவசதியும், தீவன இட அளவு 5 அடி அளிக்க வேண்டும்.

** கூண்டு முறை வளர்ப்பில் நான்கு கோழிகளுக்கு 18" x 15"அளவு கூண்டு இருக்க வேண்டும் (ஒரு கோழிக்கு 0.46 சதுர அடி)

** ஒவ்வொரு 30 முட்டைக் கோழிகளுக்கும் ஆறு அடி நீண்ட தீவனத்தட்டும், 18 இஞ்ச் வட்ட வடிவ தீவனத்தட்டு ஒவ்வொரு 100 கோழிகளுக்கும் 4-5 எண்ணிக்கையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

** 18 இஞ்ச் அகலமுடைய பிளாஸ்டிக் தண்ணீர்த் தட்டுகளை ஒவ்வொரு 100 கோழிகளுக்கும் இரண்டு என்ற வீதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

** ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் கொட்டகைகளில் 6 இஞ்ச் உயரத்திற்கு ஆழ்கூளத்தைப் பரப்ப வேண்டும்.

** கோழிகளின் முதுகு உயரத்திற்கு தீவனம் மற்றும் தண்ணீர்த் தட்டுகளைத் தொங்க விட வேண்டும்.

** தீவனத்தட்டுகள் மற்றும் தண்ணீர்த் தட்டுகளில் உள்ள கம்பிகளைக் கோழிகளின் உயரத்திற்கு ஏற்றவாறு சரி செய்ய வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?