இதோ மக்காச்சோளத்தை தாக்கும் இன்னும் சில நோய்/பூச்சிகளும், அதற்கான தீர்வுகளும்

 |  First Published Nov 15, 2017, 12:59 PM IST
Here are some more disease pests that can attack maize and solutions



** பாக்டீரியா, பூஞ்சாணம்    - 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தெளிக்கலாம்

** சாறு உறிஞ்சும் பூச்சி    - 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதை மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.

** கம்பளிப் புழு பாக்டீரீயா    - 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ சோற்றுக் கற்றாளைச் சாறு கலந்து தெளிக்கலாம்

** கம்பளிப்புழு சுருள் பூச்சி, இலை சுருட்டுப் புழு     - 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.

** மிளகாய்ப் பேன், வெள்ளை ஈ    - 200 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் புகையிலைச் சாறு கலந்து தெளிக்கலாம்

** நெல் இலை சுருட்டுப் புழு    - 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி காட்டாமணிச் சாறு கலந்து தெளிக்கலாம்

** நெல் தூர்அழுகல், இலை அழுகல் நோய்    - 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.

** பாக்டீரியா இலைக் கருகல் நோய்    - 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ குன்றிமணி இலைச்சாறு அல்லது வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்

** நிலக்கடலை தூர் அழுகல் நோய்    - 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தெளிக்காலம்.

** பயறு வகை சாம்பல் நோய்    - 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தெளிக்கலாம்

** தென்னை வாடல் நோய்    - 200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்.

click me!