சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு எப்படி உரமிடனும் தெரியுமா?

 |  First Published Jun 9, 2017, 12:40 PM IST
How do you know Samba and Thaladi paddy fields?



சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு உரமிடுதல்

தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக சம்பா பட்டத்தில் 1.05 இலட்சம் ஹெக்டேரிலும், தாளடி பட்டத்தில் 30 இலட்சம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி செய்யப்படும். சம்பா பட்டத்தில் நீண்ட நெல் இரகமான சி.ஆர்.1009, மத்தியகால இரகமான கோ-43, ஆடுதுறை-38, ஆடுதுறை – 39, ஆடுதுறை-46, பிபிடி (5204) போன்ற இரகங்கள் சாகுபடி செய்யப்படும்.

Tap to resize

Latest Videos

தாளடி பட்டத்தில் மேற்கூறிய மத்திய கால இரகங்களே சாகுபடி செய்யப்படும். நீண்ட கால மற்றும் மத்திய கால இரகங்களுக்கு ஒரு ஏக்கருக்கு மொத்தம் தழைச்சத்து 60 கிலோவும், மணிச்சத்து 24 கிலோவும், சாம்பல் சத்து 24 கிலோவும் இடவேண்டும்.

இதில் நெல் நடவு செய்வதற்கு முன் அடியுரமாக நீண்ட கால இரகத்திற்கு 12 கிலோ தழைச்சத்து, 24 கிலோ மணிச்சத்து, 12 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும்.

மீதமுள்ள தழைச்சத்தை நான்கு பகுதிகளாக பிரித்து மேலுரமாக இடவேண்டும். மீதமுள்ள சாம்பல்சத்தை இரண்டாவது மேலுரமாக தழைச்சத்து இடும்போது சேர்த்து இடவேண்டும்.

மத்திய கால இரகங்களுக்கு மொத்த உரப்பரிந்துரையில் 24 கிலோ தழைச்சத்து, 24 கிலோ மணிச்சத்து 12 கிலோ சாம்பல் சத்தையும் அடியுரமாக இடவேண்டும். மீதமுள்ள தழைச்சத்தை இரு பகுதிகளாக பிரித்து மேலுரமாக இடவேண்டும்.

அதேபோல் மீதமுள்ள 12 கிலோ சாம்பல் சத்தை இரண்டாவது மேலுரம் இடும் தழைச்சத்துடன் சேர்த்து நடவு செய்த 40 ஆம் நாள் இடவேண்டும்.

நீண்ட கால இரகம் மற்றும் மத்திய கால இரகங்களுக்கு அடியுரமாக இடக்கூடிய உரங்களை நேரடியாக யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களாக இடலாம். 10:26 :26 சத்து கொண்ட காம்ப்ளக்ஸ் உரம் அல்லது 15:15:15 அல்லது 17:17:17 காம்பளக்ஸ் உரங்களாக இடலாம்.

நீண்டகால இரகங்களுக்கு அடியுரமாக ஏக்கருக்கு டிஏபி 52 கிலோவும், யூரியா 6 கிலோவும், பொட்டாஷ் 20 கிலோவும் இடவேண்டும். மத்திய கால இரங்களுக்கு டிஏபி 52 கிலோவும், யூரியா 32 கிலோவும், பொட்டாஷ் 20 கிலோவும் இடவேண்டும். 10:26:26 காம்ப்ளக்ஸ் உரத்தை பயன்படுத்தினால் நீண்ட கால இரகத்திற்கு ஏக்கருக்கு 46 கிலோ 10:26:26 காம்ப்ளக்ஸ் உரத்தையும், 75கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தையும், 16 கிலோ யூரியா உரத்தையும் அடியுரமாக இடவேண்டும்.

மத்திய கால இரகத்திற்கு 46 கிலோ மேற்கண்ட காம்ப்ளக்ஸ் உரத்தையும், சூப்பர் பாஸ்பேட் 75 கிலோ, யூரியா 42 கிலோ அடியுரமாக இடவேண்டும். 15:15:15 காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தினால் நீண்டகால இரகத்திற்கு அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோகாம்ப்ளக்ஸ் உரத்தையும், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தையும் இடவேண்டும்.

மத்திய கால இரகத்திற்கு 80 கிலோ 15:15:15 காம்பளக்ஸ் உரம், 75 கிலோ சூப்பர்பாஸ்பேட் உரம் மற்றும் 26 கிலோ யூரியா ஆகியவற்றை இடவேண்டும். 17:17:17 காம்ப்ளக்ஸ் உரத்தை பயன்படுத்தினால் நீண்டகால இரகத்திற்கு ஏக்கருக்கு 70 கிலோ மேற்கண்ட காம்ப்ளக்ஸ் உரத்தையும், 75 கிலோ சூப்பர்பாஸ்பேட் உரத்தையும் அடியுரமாக இடவேண்டும்.

மத்திய கால இரகத்திற்கு 70 கிலோ, 17:17:17 காம்ப்ளக்ஸ் உரமும், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரமும், 26 கிலோ யூரியாவும் அடியுரமாக இடவேண்டும். காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தும்போது மேலே குறிப்பிட்டுள்ளபடி அதிலுள்ள சத்துக்களுக்கு தக்கவாறு உரத்தின் அளவை கணக்கிட்டு பயன்படுத்தவேண்டும்.

click me!