1.. இலைப்புள்ளி நோய்
மழை அதிகம் பெய்த நிலையில் ஆங்காங்கே சில பயிர்களில் பூச்சிகளும், நோய் தாக்குதலும் காணப்படுகிறது. நெல், தென்னை, வாழை ஆகியவற்றில் காணப்படும் இதுபோன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் சில
நெல் மழைக்குப்பின் நெல் பயிரில் இலைப்பேண் தாக்குதல் குறைவாக இருக்கும். ஆனால் படைப்புழு மற்றும் கூண்டுப்புழுக்களின் தாக்குதலால் சேதம் அதிகரிக்கும். இதில் படைப்புழுவால், குன்றுகள், காடுகள், வாய்க்கால்களை ஒட்டி அமைந்துள்ள வயல்களுக்கு சேதம் ஏற்படலாம்.
படைப்புழு பகலில் பதுங்கி இருந்து இரவில் நெற்பயிரை தாக்குகின்றன. இந்த புழுவின் தாக்குதலால், பயிர்கள் ஆடு, மாடு மேய்ந்தது போல் இலைகள் வெட்டுபட்டு காணப்படும்.
இதனைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மிலி குளோரிபைரிபாஸ் மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் முழுவதும் நன்கு நனையும்படி மாலை நேரத்தில் தெளிக்கவேண்டும்.
2.. கூண்டுப்புழு:
வடிகால் வசதியில்லாமல் தண்ணீர் அதிகம் தேங்கும் வயல்களில் கூண்டுப்புழுக்கள் தாக்குதல் ஏற்படுகிறது. இலை நுனியில் வெட்டுப்பட்டும், இலைகளில் வெண்ணிறமாக அறிக்கப்பட்டது போல் காணப்பட்டால் கூண்டுப்புழு தாக்குதலால் ஏற்பட்டது என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
கூண்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வயலின் குறுக்கே கயிற்றை இழுத்து கூண்டுப்புழுக்களை நீரில் விழச்செய்யவேண்டும். பின்னர் தண்ணீரை வடிக்கவேண்டும். வடிகாலில் வைக்கோல் பிரி அல்லது சாக்கு வைத்து மிதந்துவரும் கூண்டுப்புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.
வயலில் இருந்து தண்ணீரை முழுவதும் வடித்தபின்னர் தான் மருந்து தெளிக்கவேண்டும். ஏக்கருக்கு 400 மிலி மானோகுரோட்டோபாஸ் மருந்து தெளித்து கூண்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.