துவரையைத் தாக்கும் காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறை
துவரை தற்போது அனைத்து ஊர்களிலும் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது பூக்கும் தருணத்தில் வரும்போது, பூக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், திரட்சியான காய்களை பெற்றிடவும் டி.ஏ.பி தெளிப்பு தேவைப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் காய்ப்புழுக்கள் தாக்குதலும் அதிக அளவில் இருக்கும்.
பச்சை காய்ப்புழு, புள்ளி காய்ப்புழுக்களின் தாக்கம் பரவலாக இருக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த டைகுளோரோவாஸ், பாசலோன், நிப்பிசிடின் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்து புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
கூடுதல் மகசூலுக்கு இலைவழி மூலம் 2 சதவீதம் டி.ஏ.பி. கரைசல் தெளிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தலாம்.
ஏக்கருக்கு தேவைப்படும் 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை தெளிப்பதற்கு முந்தைய நாள் 10 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும்.
பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், காய் பிடிக்கும் தருணத்தில் மறுமுறையும் காலை அல்லது மாலை வேலைகளில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் புழுக்களைக் கட்டுப்படுத்தி மகசூலை அள்ளலாம்.