மாடுகளுக்கு ஏற்படும் கருப்பை வெளித் தள்ளுதல் :
சில மாடுகளுக்கு சினைப் பருவத்தின் கடைசி மாதத்திலோ அல்லது கன்று ஈன்ற பின்போ கருப்பை வெளியே வாய்ப்புண்டு। இதனைத் தடுக்க ஒரே சமயத்தில் அதிக தீவனம் அல்லது தண்ணீர் கொடுக்க கூடாது.
மாடுகள் படுத்திருக்கும் பொழுது பின் புறம் சற்று உயரமாகவும், முன் புறம் சற்று பள்ளமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். கருப்பை வெளியே தள்ளப்பட்டால் மண் மற்றும் தூசுகள் படாமல் இருக்கவும், உலர்ந்துவிடாமல் இருக்கவும் சுத்தமான ஈரத்துணியை போர்த்தி வைக்கலாம்.
உடனே மருத்துவரை அணுகவும்.முதலுதவி பெட்டிவிபத்துகள், நோய்கள் என்பவை முன் அறிவிப்பின்றி வருவது। எனவே அவசர உதவிக்காக முதலுதவி பெட்டி ஒவ்வொரு கால்நடை பராமரிபாளர் வீட்டிலும் இருக்க வேண்டும்.
அதில் இருக்க வேண்டிய மருந்துகள் பின்வருமாறு, கட்டுத் துணி, கயிறு, பஞ்சு, ஒட்டுப் பட்டை(பிளஸ்திரி)· டெட்டால் அல்லது சாவ்லான், கத்தரி கோல்· டிங்க்சர் அயோடின், பீட்டாடுன் கலவை, டிங்க்சர் பென்சாயின்· கையுறை, வெள்ளை துணி,· பாராசிட்டாமால், அவில், பெரிநார்ம், அனால்ஜீன் மாத்திரைகள் அல்லது ஊசிகள்.
திசு காகிதம், வெப்ப மானி, டார்ச் லைட், பேனா, வெள்ளை தாள், சங்கிலி போன்றவைமுதலுதவி மட்டும் செய்து முழுசிகிச்சை செய்யாவிட்டால் கால்நடைகள் இறக்க நேரிடலாம். எனவே அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிப்பது அவசியம்.