1.. யூரியா நச்சு :
undefined
தவறுதலாக யூரியாவை மாடுகள் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் கலப்பதாலோ, அல்லது யூரியா உரமிட்ட வயலில் தண்ணீர் குடிப்பதாலோ யூரியா நச்சு ஏற்படலாம்। வாயிலிருந்து எச்சில் மற்றும் நுரைவடிதல், மூச்சுவிட சிரம்ப்படுதல், வலிப்பு ஏற்படுதல் ஆகியன முக்கிய அறிகுறிகள்। முதலுதவியாக கறவை மாடுகள் மற்றும் எருதுகளுக்கு வினிகர்( 2 முதல் 4 லிட்டர் வரை பிரித்து) கொடுக்க வேண்டும். ஆடுகளுக்கு அரை லிட்டர் கொடுக்கலாம்.
2.. நஞ்சுத் தன்மை :
கால்நடைகள் நஞ்சுத் தன்மையுடைய செடிகளையோ, பூச்சி மருந்துகளை எதிரபாரமல் உட்கொள்வதாள்லோ, பூச்சி கொல்லி மருந்து டப்பாகளை நாக்கினால் நக்குவதாலும் மற்றும் பூச்சி மருந்து தெளித்த பயிரை உட்கொள்வதாள்லோ உடம்பில் நஞ்சுத் தன்மை ஏற்படலாம்। அச்சமயம் வயிறு உப்புசம், வாயிலிருந்து எச்சில் மற்றும் நுரைவடிதல், மூச்சுவிட சிரம்ப்படுதல், வலிப்பு, நினைவிழப்பு ஏற்பட்டு இறப்பு நீகழ வாய்ப்புண்டு.
முதலில் நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். நஞ்சு வயிற்றில் தங்காமல் இருக்க சோப்புக் கரைசல் அல்லது உப்புக் கரைசலை வாயின் வழியாக கொடுக்கலாம். அடுப்புக் கரியை பொடி செய்து தண்ணீரில் கலந்து வாயில் ஊற்றலாம்.
3.. வெறிநாய் கடி :
எல்லா வெப்ப ரத்த விலங்குகளுக்கும் இந்நோய் வரும். இவ்வியாதியுள்ள ஒரு விலங்கின் உமிழ் நீரில் கருமி வெளியேறுகிறது. வியாதியுள்ள விலங்கு கடித்தாலோ அல்லது ஒன்றாய் உள்ள விலங்கின் உடம்பில் ஏதேனும் புண்ணிருந்து அதை நக்கினாலோ இக்கிருமி உடம்புக்குள் புகுந்துவிடும். அந்த சதைபகுதியிலேயே இனப்பெருக்கம் செய்து நரம்பு வழியாக தண்டுவடம் மற்றும் மூளையை அடைகிறது.
10 நாள் முதல் 7 மாதத்திற்குள் நரம்பு நோய் வந்து மரணம் அடையும்.இதன் அறிகுறிகள் கண்டவரை எல்லாம் கடிக்க வரும், கண்ணில் பட்டதையெல்லாம் தின்ன முற்படும், கீழ்தாடை தொங்கும்। உமிழ் நீர் நூலாய் வழியும். சில நாட்கள் கழித்து உறுப்புகள் செயலிழந்து அமைதியாகிவிடும்.
இவ்வியாதியுள்ள விலங்கினை தனியே அடைத்துவிடவும். கையுரை அணியாமல் விலங்கினை தொடக்குடாது. கடிபட்ட இடத்தை சுத்தமான நீர் மற்றும் சோப்பால் கழுவி விட்டு உடனே மருத்துவரை அணுகவும். வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் போடப்படும்.
4.. பாம்பு கடி :
பாம்பு கடி என்றால் ரத்தப் போக்கை கொஞ்ச நேரம் தடுக்காமல் விட்டுவிடலாம். காயத்தை சுத்தப்படுத்தி கட்டுப்போட வோண்டும். பாம்பு கடி என்பதன் அறிகுறிகள் நிற்க முடியாமல் கீழே விழுதல், எழவும் முடியாது. வாந்தி, . உமிழ் நீர் வழியும், மூச்சுவிட சிரம்ப்படும். சிறுநீரில் இரத்தம், காயத்திலிருந்து தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கும். உடனே மருத்துவரை அணுகவும்.
5.. தொண்டை அடைப்பு :
மாடு அல்லது ஆட்டின் தொண்டையில் ஏதாவது அடைத்துவிட்டால் கையை அல்லது விரலை விட்டு எடுத்துவிடலாம். அவசியப்பட்டால் கைக்குட்டையால் நாக்கை கிழே அழுத்திக் கொண்டு வாயிக்குள் இடுக்கி கொண்டு அடைப்பை எடுத்துவிடலாம். உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் வயிறு உப்புசம் ஏற்படலாம். கவனிக்காவிட்டால் மாடுகள் 4 அல்லது 5 மணி நேரத்தில் இறந்துவிடும்.