பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்கு தகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும்.
மற்ற முட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 19 நாட்கள் 100 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 90 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம் உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 15 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம்.
பின்னர் கேட்சர் மெஷினில் 3 நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும். மேலும் இது பற்றிய தகவல்களை அந்தந்த மாவட்ட கால்நடைத் துறை அலுவலகங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இதனை ஒரு ப்ராஜெக்ட் போல் சமர்பிக்க வேண்டியிருப்பதால் நம்மைப் போன்ற முனைவோர்களைச் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பார்கள் எந்த தயக்கமும் தேவையில்லை.
பல லட்சங்களை கம்பெனிகளிடம் கட்டை ஈமுக் கோழி,நாட்டுக் கோழி என ஏமாறுவதைவிட அரசாங்க உதவிகள் மூலம் சுமார் முப்பதாயிரம் முதலீட்டிலேயே அந்த வருமானத்தை நாமாகச் செய்யும் போது பார்த்துவிடலாம்.
மேலும் நாட்டுக் கோழிக்கு விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமே இல்லை.கறிகடைக்காரர்கள் முதல் அனைவ்ரும் தேடி வந்தே வாங்கிக் கொள்வார்கள்.
கோழி குஞ்சு முட்டையிலிருந்து வருவதனைப் பார்ப்பதற்காக அருகிலேயே காத்திருப்பதும்... குஞ்சுகள் தாயின் மேலே ஏறி விளையாடுவதும்.. இறகுக்குள் மறைந்து கொள்வதும் பார்க்க பார்க்க ஆனந்தம்...
இப்பவெல்லாம் கிராமங்களில் கூட கோழி வளர்ப்பு குறைந்து வருகிறது... நகர வாழ்க்கை நடைமுறை எல்லோரையும் தொற்றிக் கொண்டு செல்கிறது. வேலைக்கு போக வேண்டும்.
வீட்டில் செய்யும் கிராமங்களில் செய்யும் சிறுதொழில் முறைகள் குறைந்து ஆடம்பர நகர்ப்புற சிறுதொழில்முறை தான் தொலைக்காட்சிகளை நிறைப்பதுடன், மக்களையும் ரீச் ஆகுகிறது. மற்றவை கவலைக்கிடம் ஆகுகின்றன.
கோழி வளர்ப்பு, பெட்டி முனைதல், கூடை பின்னுதல், பாய் முனைதல்... மறைகிறது. டெய்லரிங்க் என்னும் நிற்கிறது.