உயரத்தில் அமைக்கப்படும் கூண்டு முறை கொட்டகைகள்
1.. கொட்டகையின் உயரம் காங்கிரீட் தூண்களால் 6-7 அடி வரை உயர்த்தப்படுகிறது.
2.. இரண்டு காங்கிரீட் தூண்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி 10 அடிகளாகும்.
3... மூன்று எம் வடிவத்தில் கூண்டுகள் அமைக்கப்பட்டால் நான்கு பிளாட்பார்ம்கள் தேவை.
4.. இரண்டு எம் , மற்றும் இரண்டு எல் வடிவ கூண்டுகள் அமைக்க வேண்டுமெனில் மூன்று பிளாட்பார்ம்கள் தேவை.
5.. பிளாட்பார்ம்களை கட்டும்போது இரும்பு உருளைகள் அல்லது ராட்கள் மூலம் கூண்டுகள் பொருத்தப்படும்.
6.. இரண்டு பிளாட்பார்ம்களுக்கு நடுவில் உபயோகப்படுத்தப்படும் கூண்டுகளைப் பொருத்து 6-7 அடி வரை இடைவெளி இருக்கும்.
7.. கொட்டகையின் மொத்த உயரம் 20-25 அடியாகவும், அகலம் 30-33 அடியாகவும் இருக்கும்.
8.. வெப்பமண்டல நாடுகளில் இந்த வகைக் கொட்டகைகளை அமைப்பதால் போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்கிறது.