மரிக்கொழுந்தை சாகுபடி செய்வதற்கான நுட்பங்கள் இதோ...

First Published Apr 2, 2018, 1:14 PM IST
Highlights
Here are the techniques for the cultivation of marigold ...


மரிக்கொழுந்து சாகுபடி 

மரிக்கொழுந்து செடிகள் விதை முலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு எக்டரில் விதைக்க 1.50 கிலோ விதை தேவைப்படும். விதைகள் மிகச்சிறயவை. விதைகள் முந்தன பருவத்து பயிரிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஓராண்டுக்கு மேலான பழைய விதைகள் முளைப்புத் தன்மையை இழந்து விடுகின்றன.

நாற்றங்கால் பாத்திகள் 2 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் உடையதாக அமைக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 5 கிலோ மக்கிய தொழுஉரம், 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட்டு மண்ணோடு நன்றாக கலக்க வேண்டும். ஒரு எக்டர் நடவு செய்ய 1.5 கிலோ விதையை 500 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நாற்றங்காலில் விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன் விதைகளை விதைநேர்த்தி செய்யவேண்டும் (1 கிலோ விதைக்கு 50 கிராம் சூடோமோனாஸ்).

விதைகளை 10 கிலோ மணலுடன் கலந்து, சுமார் 3 கிராம் விதை 1 சதுர மீட்டர் பரப்பளவில் விழுமாறு தூவி விதைக்க வேண்டும். பின்பு விதைகளை மணல் தூவி மூடவேண்டும். பூவாளி கொண்டு ஒரு நாளைக்கு இருமுறை வீதம் தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த 3-4 நாட்களில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். விதைகளை 48 மணி நேரம் ஈரத்துணியில் ஊறவைத்து, முளைக்கட்டியும் விதைக்கலாம்.

நடவு  வயலை கட்டிகளின்றி நன்கு உழுது 2 ஒ 2 மீட்டர் அளவில் பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும்.  விதைத்த 30 நாட்கள் கழித்து நாற்றுக்களை பிடுங்கி 15 ஒ 7.5  செ.மீ. என்ற அளவில் இடைவெளியிட்டு நடவேண்டும். அந்த சமயம் நாற்றுக்கள் சுமார் 10 – 12 செ.மீ. அளவு உயரமிருக்கும்.

மரிக்கொழுந்து பயிருக்கு எக்டருக்கு 15 டன் நன்கு மக்கிய தொழு உரம், 125 கிலோ தழை, 125 கிலோ மணி மற்றும் 75 கிலோ சாம்பல் சத்து உரங்கள் சிபாரிசு செய்யப்படுகிறது. முழு அளவு நன்கு மக்கிய தொழு உரம், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாகவும், 50 கிலோ தழைச்சத்தினை நடவு செய்த 25வது நாளில் முதல் மேலுரமாகவும், பின்னர் 25 கிலோ தழைச்சத்தினை ஒவ்வொரு முறையும் அறுவடை செய்த பின்னர் மேலுரமாக இடவேண்டும்.

பொதுவாக இச்செடிகளை பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் வேப்பெண்ணெயை நீரில் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம்.

நாற்றங்காலில் நாற்றுக்கள் பூஞ்சாணத்தால் பாதிக்கப்பட்டு அழுகிவிடும். நாற்றுக்கள் மழை காலத்தில் உற்பத்தி செய்யாதிருந்தால் அழுகல் நோயை தவிர்க்கலாம். விதைத்த 5 – 6 மாதங்கள் வரை இப்பயிரை அறுவடை செய்யலாம்.  விதைத்த 45 வது நாளில் முதல் அறுவடையும், அதன் பின் 30 – 40 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக அறுவடையும் செய்யலாம்.

நல்ல விளைச்சல் பெறவும், அதிக அளவு எண்ணெய் கிடைக்கவும் அதிக அளவு பூ மொட்டுகள் விரிந்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக பிப்ரவரி கடைசி மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும்.  

செடிகளை தரையிலிருந்து சுமார் 10 செ.மீ.உயரம் விட்டு தழை வெட்ட வேண்டும்.  ஒரு எக்டரிலிருந்து 17 பசுந்தழையும், அவற்றிலிருந்து 12.50 கிலோ வாசனை எண்ணெயும் கிடைக்கிறது.
 

click me!