ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
இலைப்பேன் :
undefined
பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சிகள், இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண் திட்டுகளாகக் காணப்படும். இலைகள் நுனியிலிருந்து வாடும்.
கட்டுப்பாடு
இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மீதைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான் 300 மில்லி தெளிக்கவேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருங்கி நடுவதையும் தவிர்க்கவேண்டும்.
வெங்காய ஈ :
சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுகச் செய்யும்.
கட்டுப்பாடு :
மீதைதல் டெமட்டான் 25 இசி 1 மிலி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது மோனோகுரோட்டோபாஸ் ஒரு மில்லி மருந்துடன் டீப்பால் 0.5 மில்லி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்த கலவையுடன் கலந்து தெளிக்கவேண்டும்.
வெட்டுப்புழு :
இப்புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் வெங்காயத் தாள்களை வெட்டிச் சேதப்படுத்தும்.
கட்டுப்பாடு :
குளோபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும். வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராகப் பயிரிட்டு அதில் காணப்படும் சந்தனப் பொட்டு போன்ற முட்டைக் குவியல்களையும், கூட்டமாகக் காணப்படும். இளம்புழுக்களையும் சேகரித்து அழிக்கவேண்டும்.
இலைப்புள்ளி நோய் :
இதனைக் கட்டுப்படுத்த மான்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.