இந்த முறையில் வெங்காயம் சாகுபடி செய்தால் 90 நாட்களில் 18 டன் மகசூல் பெறலாம்...

 |  First Published May 2, 2018, 1:03 PM IST
In this case onion cultivation can be obtained in 90 days yield of 18 tons ...



இரகங்கள்: 

கோ 1, கோ 2, கோ 3, கோ 4, கோ என் 5 மற்றும் எம்டியு 1.

Tap to resize

Latest Videos

undefined

மண் மற்றும் தட்பவெப்பநிலை : 

நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் உகந்தது. களர் நிலங்கள் ஏற்றவை அல்ல. களிமண் நிலத்தில் வெங்காயம் சாகுபடி மிகவும் கடினம். 

வெப்பமான பருவ நிலையில் போதுமான அளவு மண்ணின் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு வளரும். சிறந்த மகசூலுக்கு மண்ணின் கார அமிலத்ததன்மை 6-7 இருத்தல்வேண்டும்.

பருவம் : 

ஏப்ரல் – மே மற்றும் அக்டோபர் – நவம்பர்

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு  செய்யவேண்டும். கடைசி உழவின் போது 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

எக்டருக்கு அடியுரமாக 30 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து  கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை அளிக்கவேண்டும்.

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ) – அடியுரம்
தழை சத்து - 30kg 

மணி சத்து -60kg 

சாம்பல் சத்து -30kg

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, 

யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்) 10:26:26 – 116kg 

யூரியா – 40kg 

சூப்பர் பாஸ்பேட் -188kg

விதையும் விதைப்பும்

எக்டருக்கு 1000 கிலோ விதை வெங்காயம். கோ (ஓ என்) 5 விதை மூலம் உற்பத்தி செய்வதாகும். ஒரு எக்டர் நடவு செய்ய கிராம் விதை போதுமானதாகும்.

விதைப்பு : 

நடுத்தர அளவுள்ள, நன்கு காய்ந்த வெங்காயத்தை பார்களின் இருபுறமும் சரிவில் 10 செ.மீ இடைவெளியில் நடவு  செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்த மூன்றாம் நாளும், பின்பு வாரம் ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சவேண்டும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு நடவு செய்யவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

தேவைப்படும் போது களை எடுக்கவேண்டும். வெங்காயம் நட்ட 30 நாட்கள் கழித்து, மேலுரமாக எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, கொடுக்கக்கூடிய இராசயன உரத்தை அளிக்கவேண்டும்.

அறுவடை

வெங்காயத் தாள்கள் சுமார் 60-75 சதம் காயத் தொடங்கியவுடன் அறுவடை செய்யவேண்டும். தாள்களுடன் சேர்த்து வெங்காயத்தைப் பிடுங்கிய பின்னர் மேல் தாள்களை நீக்க வெங்காயத்தை காயவைக்கவேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமுள்ள அறைகளில் சேமித்து வைக்கவேண்டும்.

அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் மாலிக்ஹைட்ரகசைடு என்ற பயிர் முளைப்பைக் கட்டுப்படுத்தும் பயிர் வினையில் இராசயனப் பொருளை 2500 பிபிஎம் என்ற விகிதத்தில் இலைவழி ஊட்டமாகத் தெளிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் வெங்காயத்தின் சேமிப்புக் காலத்தை அதிக்கப்படுத்தலாம்.

மகசூல் : 

எக்டருக்கு 70 முதல் 90 நாட்களி் 12-16 டன்கள் வெங்காயம் கோ (ஓ என்) 5 இரகத்தில்  90 நாட்களில் ஒரு எக்டரிலிருந்து  18 டன் மகசூல் அறுவடை செய்யலாம்.
 

click me!