பயிர்களைத் தாக்கும் நத்தைகளை கட்டுப்படுத்த...
** முடிந்த அளவு கண்களுக்கு புலப்படும் நத்தைகளைக் கைகளால் பொறுக்கி அழிக்க வேண்டும்.
undefined
** அழுகிய முட்டைக்கோஸ் அல்லது பப்பாளி இலைகளை வைத்து நத்தைகளை கவர்ந்து இழுத்து அழிக்கலாம்.
** நத்தைகள் கூடியிருந்தால் இடத்தில் புகையிலைச்சாறும் ஒரு சத மயில் துத்தமும் கலந்த கலவையை தெளிப்பதால் நத்தைகள் உடனே இறந்து விடும்.
** மெட்டால்டிஹைடு 5 சத மருந்தினை அரிசித்தவிடுடன் கலந்து நில இடுக்குகளில் இடுவதால் நத்தைகள் ஈர்க்கப்பட்டு நச்சுணவை உண்டு இறந்து விடும்.
** சாதாரண உணவு உப்பினை தூவுவதால் நத்தைகளின் செயல்பாடு குறைக்கப்படும்.
** சுண்ணாம்பு தூளை செடிகளை சுற்றி தூவி நத்தைகளை விரட்ட வேண்டும்.
** இயற்கையாக காணப்படும் எதிரிகளான சில நண்டுகள் மற்றும் மரவட்டைகள் நத்தைகளை அழிக்கின்றன.
** மருந்து தெளித்து இறந்து போன நத்தைகளை சேகரித்து உடனே புதைத்து விட வேண்டும்.
** நத்தைகளின் மறைவிடங்களை கண்டறிந்து உறக்க நிலையில் இருக்கும் நத்தைகளை சேகரித்தும் கட்டுப்படுத்தலாம்.
** பயிர்ச்செடிகளை நெருக்கமாக நடமால் நல்ல இடைவெளி விட்டு நடுவதால் நத்தைகளின் நடமாட்டத்தை தவிர்க்க முடியும்.