செம்மறி ஆடுகளைப் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ...

 |  First Published Dec 7, 2017, 1:33 PM IST
Here are some information you do not know about sheep



செம்மறி ஆட்டு இனங்கள் 

** செம்மறி ஆட்டு இனங்கள் இறைச்சி உற்பத்திக்காகவும் கம்பளத்திற்காகவும் வளர்க்கப்படுகின்றன. 

** இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட செம்மறி ஆட்டு இனங்கள் உள்ளன. 

** தமிழகத்தில் 8 வகையான செம்மறி ஆட்டு இனங்கள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

** தமிழகத்தில் சென்னை சிவப்பு, மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை, கடிக்கரைசல், வேம்பூர் போன்ற ரகங்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. 

** கம்பள உற்பத்திக்காக கோயம்புத்தூர்குரும்பை, திருச்சி கருப்பு, நீலகிரி செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவை கம்பளத்திற்காக வளர்க்கப்பட்டாலும் இறைச்சியும் தருகின்றன.

** ஆடுகளை மேய்க்கும்போது எல்லா ஆடுகளும் நன்கு மேய்கின்றதா? என்று கண்காணிக்க வேண்டும். 

** ஆரோக்கியமான ஆடுகள் மிகவும் ஆவலுடன் தீவனம் உட்கொள்ளும். 

** மேய்ச்சல் தரையில் மேயாமல் நின்றால் அதை கவனிக்க வேண்டும். 

** ஆடுகள் வயிறு நிரம்ப தின்றுவிட்டு மேயாமல் நிழலில் அசைபோட்டுக் கொண்டு நிற்கும். இத்தகைய ஆடுகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

click me!