பருவமில்லா காலங்களிலும் காய்கறிகளை அறுவடை செய்ய உதவும் தொழில்நுட்பங்கள்…

 |  First Published Jan 25, 2017, 2:32 PM IST



உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் மற்றும் நிழல்வலை கூடார தொழில்நுட்பத்தின் மூலம், பருவமில்லா காலங்களிலும் காய்கறிகளை அறுவடை செய்யலாம்.

மதுரை விவசாயக் கல்லூரி தோட்டக் கலைத் துறையில் இத்தொழில் நுட்பம் கற்றுத்தரப்படுகிறது.

Tap to resize

Latest Videos

கத்தரி, தக்காளி, மிளகாய் வீரிய ஒட்டுரக காய்கறி விதைகளை மெட்டுப்பாத்தி நாற்றங்கால் முறையில் வளர்த்தால் போதிய இடைவெளி இருக்காது. நாற்றுகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது.

குழித்தட்டு நாற்றாங்காலில் ஒவ்வொரு விதையாக நடுவதால், விதையின் அளவும் குறையும், வீணாகாது. கிருமிநீக்கம் செய்யப்பட்ட ஈரமான தென்னை நார்க்கழிவை, குழித்தட்டில் வைத்து அதன் மேல் விதைகளை ஊன்ற வேண்டும். குழி ஆழமாக இருந்தால், விதை வளர்வது தாமதமாகும்.

குழித்தட்டில் நாற்றுகளுக்கு இடைவெளி கிடைப்பதால், குறுகிய காலத்தில் எளிதாக முளைத்து வளரும். வளர்ச்சி சீராக இருக்கும். வேர் நன்றாக இருக்கும். நோய், பூச்சி தாக்குதல் தாக்காத இளம் கன்றுகள் கிடைக்கும். இறப்பு விகிதம் குறையும்.

விதைக்குமுன், ஒரு கிலோ விதையை 200 கிராம் அசோஸ்பைரில்லம் கலந்து விதைநேர்த்தி செய்து, அரைமணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். மேடான இடத்தில் “டிரே’க்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, பாலித்தீன் தாள் கொண்டு மூடவேண்டும். முளைக்க ஆரம்பித்தவுடன் தனித்தனியாக வைத்து நிழல்வலை கூடாரத்தில் வளர்க்க வேண்டும்.

தக்காளிக்கு 25 – 30 நாட்களும், கத்தரி, மிளகாய்க்கு 30 – 35 நாட்களும் வளர்க்க வேண்டும். நட்ட 15வது நாளில் கரையும் உயிர்உரம் இடவேண்டும். காலை, மாலை பூவாளியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். நடுவதற்கு சில நாட்கள் முன், தண்ணீரின் அளவை குறைத்து, பயிர் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். 

இவ்வாறு வளர்ந்த நாற்றுக்களை, நிழல்வரை கூடாரத்தில் வளர்க்க வேண்டும். வழக்கம் போல இரண்டு மாதத்தில் பூப்பூக்கும். 150 சதுரமீட்டர் நிழல்வலை கூடாரம் அமைப்பதற்கு ரூ.50 வரை செலவாகும்.

சுற்றுப்பகுதி மற்றும் மேற்பகுதியில் பூச்சிகள் உட்புகா வண்ணம் மூடவேண்டும். மே மாதம் அக்னி நட்சத்திரம். வெயில் கடுமையாக இருக்கும். எனவே, மீதியுள்ள மாதங்கள் முழுவதும் கூடாரத்தில் செடி வளர்க்கலாம்.

வீரிய ஒட்டுரக கத்தரி விதை எனில் ஒரு எக்டேருக்கு 200 கிராம், தக்காளிக்கு 100 கிராம், மிளகாய்க்கு 200 கிராம் விதைகள் போதும்,

click me!