வெள்ளாடு வளர்ப்பு: இறைச்சி உற்பத்திக்கு எப்படிப்பட்ட தீவனத்தை அளித்தல் நல்லது...

Asianet News Tamil  
Published : Jan 11, 2018, 01:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
வெள்ளாடு வளர்ப்பு: இறைச்சி உற்பத்திக்கு எப்படிப்பட்ட தீவனத்தை அளித்தல் நல்லது...

சுருக்கம்

Goat farming Good feeding for meat production is good ..

வெள்ளாடுகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. சிலர் ஓரிரு கடாக் குட்டிகனை வாங்கி வளர்த்து, விற்பனை செய்வர். படித்த பட்டதாரிகள், பல கடாக்களை வளர்த்து நிறைந்த வருவாய் பெற வாய்ப்புள்ளது. 

வெள்ளாடுகள் விரைவில் எடைகூடும்படி தீவனம் அளிக்கப்பட வேண்டும். அப்படியானால்தான் வளர்ப்போருக்கு அதிக ஆதாயம் கிடைப்பதுடன், இறைச்சியும் மிருதுவாக இருக்கும். 

வெள்ளாட்டுக் குட்டிகளின் வளர்ச்சி வீதம் 3 மாதம் முதல் 6 மாதம் வரை அதிகமாக இருக்கும். ஆகவே, 6 மாத வயதில் ஆட்டுக்கடாக்கள் நல்ல எடை கூடும்படி திட்டமிட்டு வளர்ப்பது சிறப்பாக அமையும்.

இறைச்சிக்காகக் குட்டிகள் வளர்க்கும்போது 3 மாதமாவது குட்டிகளைத் தாய் ஆடுகளுடன் விட்டுவிடுவது நல்லது. இது சூழ்நிலைக்கேற்றார்போல் மாறுபடும். குட்டிகளைப் பிரித்து வளர்த்து ஒரு நாளைக்கு 3-4 முறை பால் குடிக்க அனுமதிக்கலாம். மேய்ச்சலுக்கு வசதியுள்ள பகுதியில் குட்டிகளைத் தாய் ஆடுகளுடன் அனுப்புவதே சிறப்பானதாகும். 

தாயுடன் செல்லும் குட்டிகளட மேய்ச்சல் நிலத்தில் எவ்வகைத் தாவரங்களைத் தவிர்ப்பது ஆகியவற்றை அறிந்து கொள்ளும். அத்துடன் அவ்வப்போது தேவையான பாலையும் குடித்துக் கொள்ளும். குட்டிகளின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் 2 முதல் 3 மாத வயதிற்குள் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும். 

வெள்ளாடுகள் இறைச்சி உற்பத்தித் திறனில் செம்மறி ஆடுகளை விடக் குறைந்தவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், யாவரும் வெள்ளாட்டு இறைச்சியை விரும்புவதால் இதன் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். 

இத்திறன் குறைவு காரணமாக, வெள்ளாடுகள் உடல் எடையில் 3 – 4% தீவனத்தையே உடல் வளர்ச்சிக்காக ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் பால் உற்பத்திக்காக 8% வரை தீவனத்தை ஏற்கின்றன.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!