இரகங்கள்:
ரியோ - டி – ஜெனிரோ, மாரன் நடன், சுருச்சி, சுபிரபா, சுரவி, ஐஐஎஸ்ஆர் ,வராதா, ஐஐஎஸ்ஆர் மகிமா,ஐஎஸ்ஆர் ,ரிஜாதா அதிரா மற்றும் கார்த்திகா.
மண் மற்றும் தட்பவெப்பநிலை:
காற்றோட்டமான வடிகால் வசதியுள்ள, இருமண்பாடான நிலங்கள் மிகவும் உகந்தது. மழையளவு ஆண்டுக்கு 150 செ.மீ கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் உள்ள பகுதியில் இறவைப் பயிராகப் பயிரிடலாம்.
பருவம்:
மே - ஜூன்.
விதையளவு:
எக்டருக்கு 1500-1800 கிலோ இஞ்சிக் கிழங்குகள்.
விதை நேர்த்தி:
விதை கிழங்குகளை ஒரு லிட்டர் நீரில் 3 கிராம் மேன்கோசெப் (அ) காப்பர் ஆக்ஸி குளோரைடு (அ) 200 பி.பி.எம். ஸ்டெரெப்டோசைக்கிளின் கொண்டு 30 நிமிடங்கள் ஊர வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இடைவெளி:
பாசனப் பயிர் – 40 x 20 செ.மீ (பாத்திகளில்) மானாவாரிப் பயிர் - 20x20 செ.மீ (அ) 25x 25 செ.மீ (மேட்டுப் பாத்திகளில்)
உரமிடுதல்
அடியுரமாக தொழுஉரம் ஒரு எக்டருக்கு 40 டன் என்ற அளவில் கடைசி உழவு அல்லது முள் போடுவதற்கு முன் இடவேண்டும். பின்பு எக்டருக்கு 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்தை இட்டு நடவு செய்ய வேண்டும்.
மேலுரமாக எக்டருக்கு 37.5 கிலோ தழைச்சத்தையும் 12.5 கிலோ மணிச்சத்தையும் நடவு செய்த 45 மற்றும் 90 ஆவது நாட்களில் இட்டு மண் அணைக்க வேண்டும்.
இஞ்சி செடிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட உர அளவுடன் 25 சதவீதம் நிழல் இருக்குமாறு பராமரிப்பதால் மகசூல் திறனை அதிகரிக்கலாம்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
நடவு செய்தவுடன், பச்சை இலைகளைக் கொண்டு நிலப்போர்வை அமைக்கவேண்டும். மேலுரம் இடும்போது மண் அணைத்து நீர் தேங்காமல் செய்யவேண்டும்.
அறுவடை:
8-9 மாதங்களில் பயிர் அறுவடைக்கு வந்துவிடும். இலைகள் பழுப்படைவதும், காய்வதும் அறுவடைக்கான அறிகுறியாகும்
மகசூல்:
எக்டருக்கு 12-15 டன்கள்.