முத்து என்பது இயற்கையாக கிடைக்கக்கூடிய விலை உயர்ந்த பொருள்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் முத்துக்கு தேவை அதிகம்.
அளவுக்கு மீறின பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் இயற்கையில் முத்து கிடைப்பது அரிதாகி வருகிறது.
இந்தியா வெளிநாடுகளிலிருந்து ஒவ்வொரு வருடமும் வளர்ப்பு முத்துக்களை இறக்குமதி செய்து உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
இயற்கையில் வெளியிடத்துப் பொருள் ஒன்று அதாவது, மண் துகள், பூச்சிகள் போன்றவை, சிப்பி உடம்பினுள் சென்று, வெளிவராமல் இருக்க, சிப்பியானது அவ்வெளிப் பொருளின் மேல் ஒரு பளபளப்பான பகுதியை உருவாக்குகிறது. இதனால் முத்து உருவாகிறது.
இதுதான் “நன்னீர் முத்து” வளர்ப்பிலும் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாகும்.
முத்து என்பது, சிப்பியின் உள் ஓட்டுக்குள் காணப்படும் பளபளப்பான பகுதிக்கு இணையானது. இதனை முத்துப் பகுதிகளின் தாய் என்றும் அழைப்பர்.
இது கால்சியம் கார்பனேட், இயற்கையான மேட்ரிக்ஸ், தண்ணீர் ஆகிய கலவையில் உருவானது.
கடைகளில் கிடைக்கும் முத்துக்கள், இயற்கையில் கிடைப்பவையாக இருக்கும் அல்லது செயற்கையில் செய்தவை அல்லது வளர்த்து கிடைத்தவையாக இருக்கும்.
செயற்கை முத்துக்கள் அல்லது முத்துக்கள் போன்று இருப்பவை எல்லாம் முத்துக்கள் அல்ல. செயற்கை முத்துக்கள் என்பது தடிமனான, வட்டமான அடிப்பகுதியுடைய, வெளிப்புறத்தில் முத்து போன்று பளபளப்பாக முலாம் பூசப்பட்டு இருக்கும்.
இயற்கை முத்துக்களில் உள்கரு சிறியதாக இருக்கும். பொதுவாக இயற்கையில் கிடைக்கும் முத்து சிறியதாக இருக்கும். வடிவம் வித்தியாசமாக காணப்படும்.
வளர்க்கப் படும் முத்துக்களும் இயற்கையான முத்துக்கள் போலத்தான். ஒரே வித்தியாசம் மனிதனின் முயற்சியால் உட்கருவை சிப்பிக்குள் புகுத்தி, நமக்கு தேவையான அளவு, வடிவம், நிறம், அழுத்தமுடைய முத்துக்களை உருவாக்குகிறோம்.
இந்தியாவில் கிடைக்கும் முத்துக்களை உருவாக்கும் மூன்று வகையான நன்னீர் சிப்பிகள் ஆவன
அ. லேமல்லிடன்ஸ் மார்ஜினாலிஸ்,
ஆ. லே கோரியான்ஸ்,
இ. பேரிசியா காருகேட்டா.
நன்னீரில் முத்து வளர்ப்பு முறைகள்:
நன்னீர் முத்துக்கள் வளர்ப்பு என்பது 6 நிலைகளில், முறையாக செய்யப் படுகிறது. அவையாவன;
1.. சிப்பிகள் சேகரிப்பது,
2.. வளர்ப்புக்கு முன் முறைப்படுத்துதல்,
3.. அறுவை சிகிச்சை,
4.. வளர்ப்புக்கு பின் முறைப்படுத்துதல்,
5.. குளத்தில் வளர்ப்பு,
6.. முத்துக்களை அறுவடை செய்தல்.
நன்னீர் முத்து வளர்ப்பு பொருளாதாரம்:
அலங்கரிக்கப்பட்ட அல்லது வடிவமைக்கப்பட்ட முத்து என்பது பழைய முறையாக இருந்தாலும் மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய ஆய்வுகளின் படி மதிப்பு மிக்கவையாகவே இருக்கின்றன.
நிகர வருமானம் ரூ.2.20 லட்சம் / ஒரு ஏக்கருக்கு
இதன் வளர்ப்புக் காலம்: ஒன்றரை வருடம்.