ஏலத்தோட்ட பராமரிப்பு:
நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் தேவைக்கேற்ப நீர்ப்பாசனத்தை மேற்கொள்ள வேண்டும். காய்ந்த இலைகள் மற்றும் இலை உறைகளை (தொங்கு சோகை) கவாத்து செய்ய வேண்டும். இதனால் குறைந்த அளவு மருந்து தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்:
ஏலத்தட்டையின் பச்சையாக உள்ள இலை உறையை அகற்றாமல் காய்ந்த இலைகளை மட்டும் கவாத்து செய்ய வேண்டும். வேர்ப்புழுவின் முதிர்ந்த வண்டுகளைக் கண்காணித்து அவை தென்பட்டால் அவற்றை பூச்சி வலையைப்பயன்படுத்தி பிடித்து அழித்து விட வேண்டும். இதனால் அவை முட்டையிடுவதைத் தவிர்க்க முடியும். தண்டு துளைப்பான் / காய்த்துளைப்பாளைக் கட்டுப்படுத்த குயினால்பாஸ் 100 லிட்டர் தண்ணீரில், 200 மில்லி அளவு பைரோனிக் 100 லிட்டர் தண்ணீரில் 100 மிலி கலந்து தெளிக்க வேண்டும்.
நோய் நிர்வாகம்:
தோட்டத்தை அடிக்கடி கண்காணித்து (நச்சுயிரி) நோய் தாக்குதல் உள்ள செடிகள் காணப்பட்டால் அவற்றை உடனுக்குடன் அகற்றி அழித்து விட வேண்டும். இலைப்புள்ளி இனத்துரு மற்றும் செந்தாள் நோயைக் கட்டுப்படுத்த 0.25 சத மான்கோ-செப் 100 லிட்டர் தண்ணீரில் 250 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.
30 நாட்கள் இடைவெளியில் 2-3 தடவை தெளிக்க வேண்டும். ஏலக்காயில் பழுப்பு நிற புள்ளிகள் (ஆந்திராக்ளோஸ்) தென்பட்டால் 0.2 சத கார்பென்டாசிம் 100 லிட்டர்தண்ணீரில் 200 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.