ரேசன் அரிசி கொடுத்தாலும், திண்று திடமாக வாழும் நாட்டுக் கோழிகள்…

 |  First Published Feb 27, 2017, 1:23 PM IST
country chicken is very easy to grow



இன்றைய சூழ்நிலையில் ஆர்கானிக், ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை  உணவு முறைகளை  நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும்  நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல மவுசு உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர்.

இதனை பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டு கோழிகளின் விலை அதிகரிப்பின் மூலமும் அறிந்து கொள்ளலாம்

Tap to resize

Latest Videos

பண்ணை அமைப்பு முறை

நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை, காற்று, அதிக வெயில் போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை. எனவே இதற்கு ப்ராய்லர் கோழிகளுக்கு அமைப்பதை போன்ற கொட்டகை அமைப்பது தேவை அற்றது. திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக வளர்க்கலாம்.

இதற்கு “டயமன்ட் கிரில்” என்ற மிக சிறிய ஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழி தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே முழுவது வலை அடித்து விடுவதன் மூலம் பாம்புகளை நாம் தடுக்க முடியும்.

பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000 கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும், இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை, மழை,வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை  போன்ற கொட்டகை போதுமானது.

கோழி தீவனம்

கோழிகளுக்கு உணவாக பச்சை கீரைவகைகள், கோழி தீவனம், காய்கள் மற்றும் ரேசன் அரிசி போன்றவகைகள் வழங்கபடுகிறது. பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால் காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

நோய் தடுப்பு

தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும். ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும். எனவே  ஒரு கோழிக்கு நோய் வந்தாலும்  உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.

விற்பனை

குஞ்சுகள் வளந்த 80  மற்றும் 90  நாட்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம். இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.

மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் பக்கத்துக்கு நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

click me!