தென்னை சாகுபடியில், டீஜே வீரிய ஒட்டுரகக் கன்றுகள் மூலம், ஒரு ஏக்கரில் ஓராண்டில் ரூ.2 இலட்சம் வருவாய் ஈட்டலாம்.
தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் மூலம் மேற்கண்ட பலனை பெறமுடியும். நம் விவசாயிகள் சாதாரண தென்னை சாகுபடியில், முறையற்ற பராமரிப்பு மேற்கொள்வதால் உண்மையான பலனை பெற இயலவில்லை.
ஒரு தென்னை 100 முதல் 125 காய்கள் தருகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப உற்பத்தி போதாத நிலையில், அறிவியல் இங்கு கைகொடுக்கிறது.
டீஜே கன்சல்டன்சி:
இதற்கு உதவுவது ஒட்டுரக வீரிய தென்னை சாகுபடி. இதன் மூலம் அதிக தேங்காய் உற்பத்தியில், அதாவது ஆண்டுக்கு ஒருமரம் 200 முதல் 250 தேங்காய் வரை உற்பத்தி செய்யும், நிகரற்ற சேவையில் ஈடுபட்டுள்ளது, டீஜே கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனம்.
இந்த நிறுவனம் சம்பூர்ணா, புஷ்கலா மற்றும் விஷ்வாஸ் என்ற ரகங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. விற்பதோடு நில்லாமல், தென்னை சாகுபடி குறித்த தேவையான ஆலோசனைகள், குறிப்பிட்ட காலங்களில் பராமரிப்பில் உதவியை தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிறுவனம் ஒட்டுரக கன்றுகளை தயார் செய்வதே அலாதியானது. இதற்கென நாற்றங்காலை தயார் செய்து 6 மாத கன்றுகளை விற்பனை செய்கிறது. வீரியமான தாய்க்கன்றில், வீரியமுள்ள ஆண் தென்னையின் மகரந்தத்தை, நவீன தொழில்நுட்பத்துடன் சேர்த்து கன்றுகளை உருவாக்குகிறது. ஆறுமாதத்திற்கு பின், வீரியமுள்ள அதிக பச்சையான கன்றுகளை விற்பனை செய்கின்றனர்.
இலாபம் எப்படி:
ஒரு வீரிய ஒட்டுரக கன்றின் விலை ரூ.350. இது அதிகமோ என்போருக்கு, வியக்கும்படி பதிலளிக்கின்றனர். சம்பூர்ணா ரக கன்றை 25 முதல் 27 அடி இடைவெளி யில், ஒரு ஏக்கரில் 70 கன்றுகள் நடலாம். முறையாக பராமரித்தால், இக்கன்றுகள் 22 மாதங்களில் பூக்கத் துவங்குகிறது.
மூன்றாவது ஆண்டில் 3 அடி உயரத்தில் அறுவடைக்கு தயாராகிறது. (சாதாரண ரகக்கன்றுகள் 6வது ஆண்டில்தான் பூக்கத் துவங்கும். ஏழாவது ஆண்டில் காய்ப்புக்கு வரும்). ஒட்டுரக மரங்கள் குட்டையாக இருப்பதால், மருந்து தெளிப்பது, பராமரிப்பது எளிது.
ஒரு வீரியரக மரத்தில் ஓராண்டில் 18 பாளைகள் (சாதாரண ரகத்தில் 12) வெளிவரும். 300 இளநீர் காய்களும், முற்றிய தேங்காய் எனில், 250 பெரிய காய்களும் கிடைக்கும்.
இளநீர் காயில் 500 மி.லி., நீர் (சாதாரண ரகத்தில் 250 மி.லி.,), முற்றிய காயில் 200 கிராம் (சாதாரண ரகத்தில் 125 கிராம்) தேங்காய் இருக்கும். ஒரு மரம் ஆண்டுக்கு ரூ. 3 ஆயிரம் வரை பலன்தரும். எனவே 70 மரங்கள் உள்ள ஒரு ஏக்கரில் ரூ. 2.10 லட்சம் வரை பெறலாம். மரக்கன்று நட, சொட்டு நீர்ப்பாசனங்களுக்கு என, அரசு மானியம் உள்ளது.
பத்தாண்டுகளில் ஒட்டுரக மரம் 11 அடிவரை வளர்கிறது. ஏணி வைத்து காய்பறிக்கலாம். இதனால் தொழிலாளர்கள் பிரச்னையும் இங்கு இல்லை. இதனால் கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதி விவசாயிகள், இவ்வகை மரக்கன்றுகளுக்கு மாறிவிட்டனர்.
மதுரை கொடிமங்கலம் நாகதீர்த்தம் பகுதியில், இதற்கான நாற்றுப் பண்ணை 200 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது.
சிறிய விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். இவ்வகையில் 10 லட்சம் விவசாயிகள் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். டீஜே சம்பூர்ணா, புஷ்கலா, விஷ்வாஸ் என 3 ரகங்கள் உள்ளன. சம்பூர்ணாவைப் போலவே, புஷ்கலா கன்றை இளநீருக்காகவே சாகுபடி செய்யலாம்.
நடவு செய்த 26 மாதத்தில் பூக்கும். 7மாத வயதுள்ள இளநீர்க் காய்களில் 600 மி.லி., சுவையான நீர் கிடைக்கும். இதேபோல விஷ்வாஸ் ரகக்கன்றுகள் அதிகளவு கொப்பரை, எண்ணெய் தரக்கூடியது. குறைவான பராமரிப்புச் சூழலிலும் அதிக காய்ப்புத்திறன் கொடுக்கக் கூடியது.
டீஜே சம்பூர்ணா
* நடவு செய்த 24 மாதங்களில் முதல் பாளை வந்து, குறுகிய காலத்தில் பயன்தரக் கூடியது.
* இளநீராக அறுவடை செய்யும்போது, அதன் உற்பத்தி திறன் 30 சதவீதம் அதிகரித்து, அதிகபட்சமாக 400 காய்கள் வரை அறுவடை செய்துள்ளனர்.
* ஒரு எக்டேரில் (2.5 ஏக்கர்) தோராயமாக ஒருஆண்டில் 8750 கிலோ கொப்பரை கிடைக்கிறது.
* ஒரு எக்டேரில் தோராயமாக 5 டன் தேங்காய் எண்ணெய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
டீஜே புஷ்கலா
* இளநீருக்கென்றே சிறந்த வீரிய ஒட்டுரகம்.
* நடவு செய்த 26 மாதங்களில் பூக்கும் தன்மையுடையவை.
டீஜே விஷ்வாஸ்
* அனைத்து பயன்பாட்டுக்கும் ஏற்ற வீரிய ஒட்டுரகம்.
* குறுகிய காலத்தில் பூத்துக் காய்க்கக் கூடியது.