முருங்கையில் தோன்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த சில வழிகள்…

 |  First Published Jan 25, 2017, 2:34 PM IST



சில வகைப் பூச்சிகள் முருங்கை மரத்தில் ஆண்டு முழுவதும் காணப்படுகிறது.

முருங்கை மரங்களில் காணப்படும் பூச்சிகளில் நூர்டோ மொரிங்கோ, நூர்மா பிளைட்டியாவிஸ், யூட்டிரோட் டெல்லிபெரா, ஜிட்டேர்னா டைஸ்டிக்மா உள்ளிட்ட பூச்சி இனங்கள் முக்கியமானவையாக உள்ளது.

Tap to resize

Latest Videos

நூர்டோ மெரிங்கோ பூச்சி…

நூர்டோ மெரிங்கோ பூச்சி மொக்குப்புழு என்று அழைக்கப்படுகிறது. இவை முட்டை பருவத்தில்  வெண்ணிற நீள்வட்ட வடிவில் காணப்படும், இந்தப்பூச்சிகள் முருங்கை பயிரின் பூ மொக்குகளை து ளையிட்டு சாப்பிடும். தாக்கப்பட்ட பூ மற்றும் மொக்குகள் உதிர்ந்து காணப்படும். உதிர்ந்த பூ மற்றும் மொக்குகளை பொறுக்கி அழித்தும், ஹெக்டேருக்கு 1 லிட்டர் மாலத்தியான் தெளித்தும் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

நூர்டா பிளைட்டியாவிஸ் புழு…

நூர்டா பிளைட்டியாவிஸ் புழு இலைப்புழு என்று அழைக்கப்படும். இவை முட்டைப்பருவத்தில் வெண்ணிற நீள்வட்டத்தில் குவியல்கள் இலைமேல் காணப்படும். இதன் புழுக்கள் முன்மார்பு உறை இல்லாமல் இருக்கும். பூச்சி மொக்குப்புழுவை போலவே இருக்கும். ஆனால் சற்று பெரியதாக காணப்படும்.

இந்தப் புழுக்கள் இலைப்பச்சையத்தை சுரண்டி தின்பதால் இலைகள் சல்லடை போல் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த மரத்தை சுற்றி உழவு செய்து மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை வெளிக்கொணர்ந்து அழைக்கலாம்.

விளக்குப்பொறி ஹெக்டேருக்கு ஒன்று அமைத்தும், தகுந்த மருந்துகளை தெளித்தும் அழிக்கலாம்.

யூட்டிரோட் மெல்லிபெரா…

யூட்டிரோட் மெல்லிபெரா எனப்படும் கம்பளிப்புழு முட்டைப்பருவத்தில் இளம் குருத்து மற்றும் இலைகளில் குவியலாக முட்டையிடும். இதன் புழுக்கள் பழுப்பு நிறமாக வெண்ணிற உரோமங்களுடன் காணப்படும். இந்தப்பூச்சிகள் மரத்தின் தண்டுப் பகுதிகளின்  புழுக்களின் கூட்டம் ஒன்று சேர்ந்து காணப்படும். புழுக்கள் கூட்டமாக சேர்ந்து  சாப்பிடும். மரப்பட்டையை சுரண்டி சாப்பிடும். தாக்குதல் முற்றிய  நிலையில் மரம் இலைகளோ இல்லாமல் மொட்டையாக காணப்படும். முட்டைக் குவியல்கள், புழுக்களை சேகரித்து  அழிக்க வேண்டும். மழை பொழிந்தவுடன் ஹெக்டேருக்கு ஒரு விளக்குபொறி  வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். தீ பந்தம் கொண்டு தண்டுப்பகுதியில் கூட்டமாகக் காணப்படும்.

ஜிட்டேர்னா  டைஸ்டிக்மா…

ஜிட்டேர்னா  டைஸ்டிக்மா எனப்படும் காய்ப்புழு முட்டை  பருவத்தில் இளம்  காய்களில் காணப்படும். புழு வெண்ணிற கால்களற்ற ஈக்களாக இருக்கும். இதன் ஈ மஞ்சள் நிறத்திலும், கண்கள் மட்டும் செந்நிறத்திலும் இருக்கும். இவை தாக்கிய பயிர்களின் காய்கள் காய்த்தும், பிளந்தும் காணப்படும். காய்களில் இருந்து தேன் போன்ற திரவம் வடிவதே சேத்த்தின் அறிகுறி. இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மற்றும் காய்ந்து விழுந்த காய்காளை சேகரித்து அழிக்கலாம்.

click me!