கொட்டகைகளில் எவ்வளவு வகைகள் இருக்கு தெரியுமா?

 |  First Published Feb 6, 2018, 12:51 PM IST
Do you know how many types of sheds are there?



கொட்டகைகளின் வகைகள்

கால்நடைகளைப் பராமரிக்க கொட்டகை அமைத்தல் மிக அவசியம் இல்லாவிடில் அவை திறந்த வெளியில் சென்று தேவையற்ற வற்றையும் உண்டு. சூழ்நிலைமாற்றத்தாலும் அவதியுறும். எனவே கொட்டகைப் பராமரிப்பு இன்றியமையததாகிறது. நம் நாட்டில் பொதுவாக இரண்டு விதப் பராமரிப்பின் கீழ் வளர்க்கப்படுகின்றன. அவை

Tap to resize

Latest Videos

1.. திறந்த வெளி மேய்ச்சல் முறை

தீவிர மற்றும் மிததீவிர முறை என மூன்று வகைகளாகும். இது அந்தந்த இடங்களின் தட்பவெப்பநிலையையும் பணவசதியையும் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

2.. கொட்டகை அமைப்பு

கொட்டகையின் சுற்றுச்சுவர் நீள, அகல, உயரம் முறையே 5” அளவு இருக்க வேண்டும். தீவனம் பெட்டு ஒரு கால்நடைக்கு 2லிருந்து 21/2 அடி இடைவெளியுடன் இருக்க வேண்டும். தேவையான அளவு குடி தண்ணீர் அளிக்க 10” அளவு அகலமான தண்ணீர்த் தொட்டியில் அமைக்க வேண்டும்.

மேலும் தண்ணீர் தொட்டி தீவனத் தொட்டிக்கு அருகே அதிக நீர் சேதாரம் ஆகாமலும் இருக்க வேண்டும். அதைத்தாண்டி ஒரு திறந்த நடைப்பாதை 40” x 35”. 5” சுற்றளவுடன் ஒரு கதவுடன் இருக்க வேண்டும். தீவனம் உட்கொள்ளும்போது கால்நடைகள் வடக்கு நோக்கியவாறு இருத்தல் வேண்டும்.

கோடையில் குளிர்காற்று வீசும்போது சுற்றுச்சுவர் மாடுகளை குளிரிலிருந்து பாதுகாக்குமாறு அமைந்திருக்க வேண்டும்.

click me!