1.. தொண்டை அடைப்பான்
undefined
அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட ஆடுகளில் அதிகக் காய்ச்சல், மூச்சுவிட சிரமம், இருமல், கீழ்த்தாடையில் வீக்கம்,திடீரென இறந்து விடுதல்.
சிகிச்சை
ஆரம்பகால நோய்க்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்தல் மற்றும் நோய் தீர்க்கும் முன் தடுப்பூசிபோடுதல் அவசியம்.
2.. துள்ளுமாரி நோய்
எல்லா வயது ஆடுகளையும் பாதிக்கும். ஆனால் இளம் வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. மழைக்குப்பின் புதிதாக முளைத்த பசுமையான புல்வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு இந்நோய் ஏற்படும்.
அறிகுறிகள்
ஆடுகள் மேயாமல் சோர்ந்து வயிற்று வலியால் பற்களைக் கடிக்கும்.
சாணம் இளகி, இரத்தம் கலந்திருக்கும்.
ஆடுகள் நடக்கும் போது கால்கள் பின்னி, கழுத்து விரைத்து, கண்கள் பிதுங்கி, மயங்கிதலை சாய்ந்து கீழே விழும்.
இறப்பதற்கு முன் வலிப்பு ஏற்பட்டு துள்ளி விழும்.
தடுப்பு முறைகள்
சூரிய உதயத்திற்குப் பின் ஆடுகளை 1 மணி நேரம் கழித்து மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும்.
பருவமழைக்கு முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.
3.. ஒட்டுண்ணி நோய்கள்
அ.. அக ஒட்டுண்ணிகள் பரவுதல்
மேய்ச்சலின் போது ஆடுகளின் வயிற்றுக்குள் செல்கின்றன.
அறிகுறிகள்
இரத்தசோகை, பசியின்மை, எடை குறைதல், தள்ளாடி நடத்தல், தாடை வீங்குதல், உரோமம்கொட்டுதல், வயிற்றுப்போக்கு.
தடுப்பு முறைகள்
குடற்புழு நீக்கம் செய்தல்
சாணத்தை அப்புறப்படுத்தி, தரையைக் கழுவுதல்
கிருமி நாசினி மருந்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல்.
4.. புற ஒட்டுண்ணிகள்
உண்ணி, பேன், தெள்ளுப்பூச்சி மற்றும் சிற்றுண்ணிகள் (mite) ஆகும்.
பாதிப்புகள்
தோல் தடித்தல், சொறி உண்டாகுதல், முடி உதிர்தல், இரத்த சோகை, இரத்த ஒட்டுண்ணிகள்பரவுதல், தேய்த்துக் கொள்ளுதல், கடித்துக் கொள்ளுதல், அஜீரணம், இளைத்து எடைக்குறைதல்போன்றவையாகும்.
மருந்துக் குளியல், தெளித்தல் (அ) தூவுதல் முறை, இவற்றிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் ஒன்றைப்பயன்படுத்தலாம்.
மாலத்தியான் 0.5 சதவிகிதம் சுமித்தியான் 1/100 (தெளிக்கும் முறை)
பியூட்டாக்ஸ் 0.02 சதவிகிதம் லிண்டேன் 0.03 சதவிகிதம்
ஐவர்மெக்டின் 0.2 மி.கி / கி.கி உடல் எடைக்கு.