பல்வேறு விதமான பயிர்களும் அவற்றைத் தாக்கும் நோய்களை தடுக்கும் உத்திகளும்...

 |  First Published Jul 3, 2018, 2:03 PM IST
Different types of crops and techniques that prevent them from attacking them ...



பல்வேறு விதமான பயிர்களும் அவற்றைத் தாக்கும் நோய்களை தடுக்கும் உத்திகளும்...

நெல்: 

Latest Videos

undefined

நெல்லில் வரும் துங்ரோ நோயை கட்டுப்படுத்த நடவு செய்த 15 மற்றும் 30வது நாளில் மோனோகுரோட்டோபாஸ் 36 டபுள்யூ.எஸ்.சி (1000 மி.லி. / எக்டர்), அல்லது பாஸ்போமிடான் 85 டபுள்யூ.எஸ்.சி (500 மி.லி. / எக்டர்) அல்லது பென்தியான் 100 இசி (500 மி.லி. / எக்டர்) பூச்சி கொல்லியைத் தெளிக்க வேண்டும். நெல் அறுவடை செய்தபின் எஞ்சிய தாழ்களை உழவு செய்வதன் மூலம் மஞ்சள் குட்டை நோய் காரணிகளை அழித்து அடுத்த பட்டத்திற்குப் பரவாமல் தடுக்கலாம்.

பயறு வகைகள்: 

நோயுற்ற செடிகளை ஆரம்பகட்டத்திலேயே பிடுங்கி அழிக்க வேண்டும். மோனோகுரோட்டோபாஸ் (500 மி.லி./ எக்டர்) அல்லது மீத்தைல் டெமட்டான் (500 மி.லி./ எக்டர்) பூச்சிகொல்லியை 15 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

எள் : 

பச்சை சிற்றிலை நோயை கட்டுப்படுத்த எள்ளுடன் துவரை பயிரை 6:1 என்ற விகிதத்தில் பயிரிட்டால் இதன் தாக்கத்தைக் குறைக்கலாம்.

புகையிலை  : 

புகையிலையில் தோன்றும் நோயை கட்டுப்படுத்த 1 சதவீத காகிதப்பூ இலை சாற்றை மூன்று முறை ஒரு வார இடைவெளியில் தெளிக்கலாம்.

தக்காளி : 

தக்காளி புள்ளி வாடல் நோயை எண்டோசல்பான் 35 இசி (1.5 மி.லி. / லிட்டர்) பூச்சிகொல்லியை நடவு செய்த 25, 40 மற்றும் 55வது நாட்களில் தெளிக்க வேண்டும்.

கத்தரி : 

கத்தரி சிற்றிலை நோய்கண்ட செடிகளை ஆரம்பகட்டத்திலேயே பிடுங்கி அழிக்க வேண்டும். மீத்தைல் டெமட்டான் 25 இசி (2 மி.லி. / லிட்டர்) அல்லது டைமெத்தோயேட் 30 இசி (2 மி.லி. / லிட்டர்) பூச்சிகொல்லியைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மிளகாய் : 

மிளகாயில் ஏற்படும் தேமல் நோயை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஐந்து வரிசைக்கும் இரண்டு வரிசை சோளம் அல்லது மக்காச்சோளப்பயிரை பயிரிட்டு தாக்கத்தைக் குறைக்கலாம். மேலும் மீத்தைல் டெமட்டான் 25 இசி (2 மி.லி./ லிட்டர்) அல்லது பாசலோன் 35 இசி (2 மி.லி. / லிட்டருக்கு) பூச்சிகொல்லியைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

வாழை : 

முடிக்கொத்து நோய் - பாஸ்போமிடான் (2 மி.லி. / லிட்டர்) அல்லது மீத்தைல் டெமட்டான் (2மி.லி./ லிட்டர்) அல்லது மோனோகுரோடோபாஸ் (1 மி.லி. /லிட்டர்) அல்லது டைமெத்தோயேட் (2 மி.லி. / லிட்டர்) எனும் பூச்சிகொல்லியை வாழை மர தலைப்பகுதி நன்கு நனையும்படியும் தண்டு மற்றும் அடிப்பகுதியிலும் 21 நாட்களுக்கொருமுறை தெளிக்க வேண்டும். 
 

click me!