”கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம் தயாரிப்பதன் மூலம், அவை வீணாகாமல் தவிர்க்கலாம்”.
மண்வளத்தை பாதுகாக்க, வேளாண் கழிவுகளை, இயற்கை எருவாக மாற்றி பயன்படுத்தலாம். கரும்பு அறுவடையின் போது, அதன் எடையில் 20 சதவீதம் உள்ள தோகையை, எரித்து விடுகின்றனர். இதனால் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கந்தக, தழைச் சத்துக்கள் காற்றில் விரயமாகின்றன. மண்ணில் நன்மைதரும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் வெப்பத்தால் இறக்கின்றன.
நிலத்தில் இரும்புச் சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது. கரும்புத் துார்களின் முனைகள் கருகி, மறுதாம்பு பயிரில் எண்ணிக்கை குறைந்து, கரும்பு மகசூலும் குறைகிறது.
இயற்கை முறையில் தோகையை, கம்போஸ்ட் உரமாக மாற்றுவது நல்லது.
கரும்புதோகையை கரும்புதூர்களில் இருந்து விலக்கி அவை நனையும் படி நீர் பாய்ச்சி காளான் விதைகளை தூவி பின் அவற்றின் மீது மண் பரப்பி மீண்டும் நீர் பாய்ச்சி வந்தால் சில மாதங்களில் தோகை மட்கி உரமாகிவிடும்
இரசாயன முறையில் தோகையை, கம்போஸ்ட் உரமாக மாற்றுவது. 100கிலோ கரும்பு தோகையை, 7 க்கு 3 மீட்டர் பரப்பில், 15 செ.மீ., உயரத்தில் பரப்ப வேண்டும்.
இராக்பாஸ்பேட், ஜிப்சம் தலா 2 கிலோ, யூரியா ஒரு கிலோ கலந்து துாவ வேண்டும். பின் மண், மாட்டுச்சாணம், மக்கிய குப்பை தலா 5
கிலோவை, 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து, தோகை நனைய தெளிக்க வேண்டும்.
இதுபோல ஒரு மீட்டர் உயரம் படுக்கைகள் அமைத்து, கடைசி அடுக்கின் மீது 1:1 என்ற வீதத்தில் கலந்து 5 செ.மீ., உயரத்திற்கு மூடிவிட வேண்டும்.
இதன்மேல் தண்ணீரை தெளிக்க வேண்டும். ஐந்தாவது மாத இறுதியில் தோகைகள் நன்கு மக்கி, ஊட்டமேற்றிய கம்போஸ்ட் உரம் கிடைக்கும்