மல்லிகை சாகுபடி தொழில் நுட்பங்கள்
** மல்லிகை பூவில் சிங்கிள் மோக்ரா, டபுள் மோக்ரா, குண்டுமல்லி, ராமநாதபுரம் போன்ற ரகங்கள் ஏற்றதாகும்.
undefined
** ஜூன் முதல் நவம்பர் வரை மல்லிகை நடவு செய்யலாம்.
** 30 செ.மீ.க்கு 30 செ.மீ.க்கு 30 செ.மீ.என்ற அளவில் குழி எடுக்க வேண்டும்.
** 1.25 மீட்டர் இருபுறமும் இடைவெளி விட்டு ஹெக்டேருக்கு 6 ஆயிரத்து 400 பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகள் நடவு செய்ய வேண்டும்.
** செடிக்கு சாண உரம் 10 கிலோவும், தழை, மணி சாம்பல் சத்து 60:120:120 கிராம் என்ற விகிதத்தால் கவாத்து செய்த பின் ஜூன், ஜூலை மாதத்தில் இட வேண்டும்.
** நவம்பர் இறுதி வாரத்தில் தரை மட்டத்திலிருந்து 50 செ.மீ.உயரத்தில் செடிகளை கவாத்து செய்ய வேண்டும்.
** மொட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த மனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
** சிவப்பு முரணை நோயை கட்டுப்படுத்த டைகோபால் 2.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
** நூர்புழுவை கட்டுப்படுத்த டெமிக் குருணைகள் 10 கிராம் செடிக்கு அளவில் வேர் பகுதியை சுற்றி இடவேண்டும்.
** நேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து செடியை சுற்றி மண்ணில் ஊற்ற வேண்டும்.
** இரும்பு பற்றாக்குறை இருந்தால் இலைகளின் ஓரங்கள் வெளுத்தும், மஞ்சளாகவும் காணப்படும்.
** இரும்பு சல்பேட் 5 கிராம் ஒரு லிட்டர் நீருக்கு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
** மலர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கிடைக்கும்.
** ஹெக்டேருக்கு 8 ஆயிரத்து 750 கிலோ மலர்கள் கிடைக்கும். காலை 6 மணி முதல் 8 மணிக்குள் மலர்களை பறித்து வியாபாரத்திற்கு அனுப்ப வேண்டும்.
** 300 காஜ் தடிமனுள்ள பாலிதீன் பைகளில் பூக்களை அனுப்புவதால் 72 மணி நேரம் மலராமல் இருக்கும்.\