பழுப்பு தத்துப் பூச்சியின் வளர்ச்சி, தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தல்…

 |  First Published Nov 1, 2016, 4:18 AM IST



பூச்சிகளின் வளர்ச்சி…

பெண் பூச்சிகள், முட்டைகளை பெரும்பாலும் இரண்டிரண்டு வரிசைகளாக இலை உறைகளிலும், இலைகளின் நடு நரம்பின் இரண்டு பக்கங்களிலும் சொருகிவிடும். ஒரு பூச்சி 650 முட்டைகள் வரையில், ஒவ்வொரு வாpசையிலும் 1-16 முட்டைகளை இடும். முட்டைகளிலிருந்து 5-7 நாட்களில் இளம் குஞ்சுகள் வெளிவரும். புகையானில் இரண்டு வெவ்வேறு விதமான பூச்சிகள் உண்டு. ஒன்று நன்றாக வளர்ந்த இறக்கைகளைக் கொண்ட பூச்சிகள். இரண்டாவது வளர்ச்சியற்ற, குறுகிய இறக்கைகளைக் கொண்டவை. வளர்ந்த இறக்கைகளைக் கொண்ட பூச்சிகள் அதிக தூரம் பறந்து சென்று புகையான் பரவக் காரணமாகின்றன. நெல் பயிரைத் தவிர சோளம், சிறு தானியங்கள், கரும்பு போன்ற பயிர்களையும் இப்பூச்சி தாக்கக்கூடியது.

Tap to resize

Latest Videos

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்…

இப்பூச்சியின் தாக்குதல் பெரும்பாலும் குறுவைப் பயிரில், பயிரின் கண்ணாடி இலைப் பருவத்தில் அதிகமாகக் காணப்படும். குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும், தூர்களின் அடிப்பகுதியில், நீர் மட்டத்திற்கு சற்று மேலாக அமர்ந்து சாற்றை உறிஞ்சி உண்ணும். தண்டின் சாற்றுக்குழாய்த் தொகுதியுனுள் குத்தி உறிஞ்சக்கூடிய வாய்ப்பாகத்தை நேரடியாகச் செலுத்தி, சாற்றை உறிஞ்சி உண்பதோடு, அவை உட்செலுத்தும் உமிழ் நீருடன் கலந்திருக்கும் நச்சுப் பொருட்கள், தத்துப் பூச்சி எரிப்பு என்னும் இலை கரிதல் அறிகுறியையும் தோற்றுவிக்கும். இது போன்ற தத்துப் பூச்சி எரிப்பு அறிகுறி முதலில் வயலில் ஆங்காங்கே சிறிய வட்ட வட்டப் பரப்புகளாகத் தோன்றும். நாளடைவில் இது போன்ற எhpந்த பகுதிகள் விhpவடைந்து பொpய பரப்பளவில் காணப்படும். இப்பூச்சி தாக்குதலினால் செடிகளின் வேர் வளர்ச்சி குன்றி, இலைகளிலுள்ள புரதச்சத்தின் அளவும், நீரின் அளவும் மிகவும் குறைந்துவிடுகிறது. பால் பிடிக்கும் முன்னரே பயிர் கரிந்து காய்ந்துவிடும். கதிர்கள் தோன்றினாலும், அவற்றிலுள்ள மணிகள் பதராகிவிடும். இப்பூச்சிகள் நேரடியாக பயிருக்குச் சேதம் விளைவிப்பதோடு குட்டைப்புல் என்ற நச்சுயிரி நோயையும் பரப்புகின்றன. தாக்கப்பட்ட பயிர் வளர்ச்சி குன்றியும், இலைகள் சிறுத்தும், குறுகியும், புல் போன்றும் தோற்றமளிக்கும். வயலில் நடந்து செல்லும்பொழுது புகையான் தூர்ப்பகுதியில் கொசுபோல் பறப்பதைக் காணலாம்.

பூச்சிக் கட்டுப்பாடு

1.   அருணா, கர்நாடகா, கார்திகா, கிருஷ்ணவேணி, பி.ஒய்.3, கோ 42 போன்ற பூச்சி தாக்குதலுக்கு எதிர்த்து வளரக்கூடிய ரகங்களை பயிரிடலாம்.

2.   வயல் வெளிகளையும், சுற்றுப்புறங்களையும் களைச் செடிகள் மற்றும் மாற்றுப் பயிர்கள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும்.

3.   வயலில் அதிக அளவு நீர் தேக்கி வைக்காமல், அதிகப்படியான நீரை வடித்துவிட வேண்டும்.

4.   ஆறு அடிக்கு ஒரு பட்டம் வீதம் இடைவெளிவிட்டு நடவு செய்து பூச்சிகளை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும்.

5.   தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்.

6.   விளக்குப் பொறி வைத்து இறக்கைகள் உள்ள பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

7.   அட்டைகளில் அல்லது மரப்பலகைகளில் இருபுறமும் எளிதில் காய்ந்துவிடாத ஒட்டுப் பசையை அல்லது கெட்டியான எண்ணையைத் தடவி, வயலில் ஆங்காங்கே பயிர் மட்டத்திற்கும் சற்று மேலாகத் தொங்கவிட வேண்டும். பறக்கும் அல்லது குதிக்கும் பூச்சிகள் இந்த ஒட்டுப் பசையில் ஒட்டி மடிந்துவிடும். டெல்ட்டா ஒட்டுப் பொறிகளை பயன்படுத்தியும் பூச்சிகளை அழிக்கலாம்.

8.   புகையான் பூச்சிகள் நாற்றங்காலில் தென்பட்டால, நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், வயலில் 2.5 செ.மீ. உயரத்திற்கு நீர் தேக்கி வைத்து 8 சென்ட் நாற்றங்காலுக்கு 1.4 கிலோ கார்போ பியூரான் 3 சத குருணையை ஒரே சீராகத் தூவ வேண்டும்.

9.   நடவு வயலில் பூக்கும் பருவத்திற்கு முன்னர் புகையான் தென்பட்டால், ஏக்கருக்கு மோனோகுரோட்டோ பாஸ் 400 மில்லி (அ போசிலோன் – 600 மில்லி (அ) பாஸ்பாமிடான் – 200 மில்லி வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

10.  நேரிடையாக மருந்தை தூர்களின் அடிப்பகுதியில் தெளிக்க வேண்டும்.

11.  சின்தடிக் பைரித்ரையாட், மெதில் பாரத்தியான், பென்தியான், குயினால்பாஸ் போன்ற பூச்சி மருந்துகள் உபயோகித்தலைத் தவிர்க்க வேண்டும்.

12.  பால் பிடிக்கும் பருவத்தில் இந்தப் பருவத்தில் புகையான் தென்பட்டால் கார்பாpல் 10 சதத் தூளை ஏக்கருக்கு 10 கிலோ வீதம் தூவ வேண்டும்.

13.  அறுவடைக்குப் பின்னர் வயலை நன்கு உழுது தானாகவே வயலில் விழுந்த விதைகளிலிருந்து முளைக்கும் செடிகளையும் கட்டையிலிருந்து வரும் செடிகளையும் அழிப்பதன் மூலம் புகையான் உற்பத்தியைக் குறைக்கலாம்.

 

click me!