மண்ணைச் செறிவூட்ட சிறந்த கலப்பை உளிக்கலப்பை.
உளிக்கலப்பைக் கொண்டு ஆழ உழவு செய்தல் விளைச்சலை அதிகப்படுத்த அத்தியாவசியமான உத்தி ஆகும். மானாவாரி பயிர்கள் இதனால் அதிக பலனை அடைகின்றன.
undefined
இப்படி செய்வதால் கடினமான அடிமண் தகர்க்கப்பட்டு, மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையும், நீர் சேமிப்புத்திறனும் அதிகரிக்கின்றன. இவ்வாறு திருத்தி அமைக்கப்பட்ட நிலத்தின் அடிப்பகுதியில் பயிர்களின் வேர் படர்ந்து வளர உதவுகிறது.
எனவே பயிர்களின் வறட்சியைத் தாங்கும் தன்மையும், விளைச்சலும் அதிகப்படுத்தப்படுகின்றன. விரிவான ஆராய்ச்சிகளின் பயனாக குறைந்த இழுவிசை மற்றும் அதிக செயல் திறன் கொண்ட உளிக்கலப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கலப்பை 3 மி.மீ தகட்டினால் ஆன நீள் சதுர இரும்பு குழல்களால் ஆன சட்டத்தைக் கொண்டுள்ளது. இக்கலப்பையின் சட்டம் மிக நவீன உத்திகளுடன் கம்ப்யூட்டரின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கலப்பையை கொண்டு 40 செ.மீ. வரை ஆழ உழவு செய்யலாம்.
இக்கலப்பையை 35 முதல் 45 குதிரை திறன் கொண்ட டிராக்டரால் எளிதாக இயக்கலாம். இந்த உளிக்கலப்பையைக் கொண்டு உழவு செய்தால் எக்டருக்கு ரூ.265 செலவு ஆகும்.