மண் மாதிரிகள் சேகரிப்பதற்கு முன்பு இத்தனை விஷயங்களை கவனித்தில் வைப்பது அவசியம்…

Asianet News Tamil  
Published : Aug 28, 2017, 12:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
மண் மாதிரிகள் சேகரிப்பதற்கு முன்பு இத்தனை விஷயங்களை கவனித்தில் வைப்பது அவசியம்…

சுருக்கம்

Before collecting soil samples it is necessary to keep these things in mind ...

** மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம் மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து, தனித் தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.

** வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கு, குப்பை உரங்கள், பூஞ்சான மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.

** அதிகபட்சமாக ஐந்து எக்டேருககு ஒரு மாதிரியும், குறைந்தபட்சம் கால் எக்டேருக்கு ஒரு மாதிரியும் சேகரிக்க வேண்டும்

** நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்

** உரமிட்டடவுடன் சேகரிக்கக்கூடாது. குறைந்தது 3 மாத இடைவெளி தேவை

** பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது

** மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.

** மாதிரி எடுக்கும் பொழுது ஆங்கில் எழுத்து “V” போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும். பிறகு நிலத்தின் மேல்மட்ட பகுதியிலிருந்து கொழு ஆழம் வரை (0-15 செ.மீ. அல்லது 0-23 செ.மீ.) ஒரு இஞ்சு (அ) 2.5 செ.மீ. பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும்.

** இவ்வாறாக குறைநதபட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்த வேண்டும்.

** நுண் ஊட்டங்கள் அறிய வேண்டுமானால் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குறுப்பி மூலம் தான் மண் மாதிரிகள் எடுத்து, பிளாஸ்டிக் பக்கெட்டில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி, இரும்பு சட்டிகளை பயன்படுத்தக் கூடாது.

** பின்பு சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு 12 கிலோ மண் மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும்.

** வாளியில் சேகரித்த மண் மாதிரியை சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி, அதனை நான்காகப் பிரித்து, எதிர் முனைகளில் காணப்படும். இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் 12 கிலோ அளவு வரை இம்முறையினை திரும்பத் திரும்ப கையாள வேண்டும்.

** சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பை பாலித்தீன் பையில் போட்டு அதன் மீது மாதிரியைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை அல்லது பைகளை மண் மாதிரிகள் அனுப்ப உபயோகிக்கக் கூடாது.

PREV
click me!

Recommended Stories

Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!
Agriculture: ஏக்கருக்கு ரூ.10 லட்சம் லாபம்.! சமவெளி, வறட்சி பகுதிகளிலும் செய்யலாம் அவக்கோடா சாகுபடி.! இது தெரியாம போச்சே.!