வாழைப்பழத் தோல்கள் கூட தாவரங்களுக்கு உரமாக மாறும்…

 |  First Published May 17, 2017, 12:01 PM IST
Banana skins will also become fertilizer for plants ...



வாழைப்பழங்கள் ஒரு சிறந்த ஆற்றல் ஆதாரமாகும்.

வாழைப்பழத் தோல்களை தூக்கி எறியாமல் உங்கள் தாவரங்களுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.

Tap to resize

Latest Videos

உங்களுக்கு தாவரங்கள் வளர்க்கும் ஆற்றல் மற்றும் ஈடுபாடு இருந்தால், வாழைப்பழங்கள் ஒரு சிறந்த உரமாக பயன்படும்.

அவை நம் உடலுக்கு ஊட்டம் அளிப்பது போல் தாவரங்களுக்கும் பயனளிக்கின்றது.

வாழைப்பழ உரம் மூன்று வழிகளில் தயாரிக்கப்படுகிறது…

வாழைப்பழ அடிப்படைகள் வாழைப்பழத் தோல்களை சில துண்டுகளாக வெட்டி, அவற்றை தினசரி மட்கும் குப்பையுடன் சேர்த்து வைக்கலாம் அல்லது நேரடியாக மண்ணில் கலக்கலாம்.

இவை சில நாட்களில் மக்கிய உரமாக மாறிவிடும். மேலும் உங்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும்.

உரம் தெளிப்பான் வாழைப்பழத் தோலை நன்றாக சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, அவற்றை ஒரு தெளிப்பானில் எடுத்துக் கொள்ளவும். அதில் சூடான நீரை பாதியளவு நிரம்பும் வரை ஊற்றிக் கொள்ளவும்.

தோல் மற்றும் நீர் கலந்த அந்த கலவை நன்றாக நொதிக்கும் வரை ஒரு வாரம் அப்படியே வைத்து விடவும். நீங்கள் இப்போது இந்த டிஎல்சி மற்றும் ஆற்றலை தெளிக்கலாம். வாழைப்பழத் தோல் ஷேக் ஆம்! நீங்கள் படித்தது சரிதான்.

நீங்கள் விரைவான உரம் தேடுகிறீர்கள் என்றால், வாழைப்பழத் தோலை சூடான நீரில் மசித்துக் கொள்ளவும். இது ஒரு உடனடி வழி. மேற்கூறியவற்றை வீட்டில் முயற்சி செய்து பார்க்கவும்.

அப்படி செய்தால் உங்கள் தாவரங்களும், மரக்கன்றுகளும் கூட உங்கள் மீது காதல் கொள்ளும்.

click me!