மண்ணில் பாக்டீரியாவின் வேலை…

 |  First Published Oct 12, 2016, 4:47 AM IST



பாக்டீரியா, மண்ணில் உள்ள கரிம பொருள் உட்பட அனைத்து பொருட்களையும் சிதைத்தால் தான் மண்ணின் வளம் அதிகரிக்கும். தாவரங்களிலிருந்து கிடைக்கும் கரிம பொருட்கள் மண்ணிற்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றன. பாக்டீரியாக்கள் மண்ணில் கூட்டாய் உருவாகும். மண்ணில் உள்ள நச்சு பொருட்களின் தரத்தை குறைக்கின்றன. வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி தாவர நோய்களை தடுக்கும் திறன் கொண்டது.

பொதுவாக பாக்டீரியாக்கள் மண்ணில் ஒரு உயிரியாக வாழ்கிறது. பாக்டீரியங்களின் முக்கியமான பொறுப்பு, ஒரு இரசாயன படிவத்தை மற்றொரு கனிம அங்கங்களாக மாற்றும்.

Tap to resize

Latest Videos

மண்ணில் பாக்டீரியா இருப்பதால் மண்ணில் உள்ள சத்துக்கள் மற்றும் ஆற்றலை தேவையான இரசாயன வடிவங்களில் மற்ற தாவரங்களுக்கு வழங்க உதவுகின்றன. உதாரணமாக, பாக்டீரியங்கள் நைட்ரேட்டை நைட்ரைட்டாகவும், சல்பேட்டை சல்பைட்டாகவும், அம்மோனியாவை நைட்ரைட்டாகவும் மாற்றி தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது

click me!