பூச்சிகளை அழிக்க ரசாயன பூச்சிக் கொல்லிகள் அவசியமில்லை. பூச்சிகளை இயற்கை முறையில் எளிதாக அழிக்க முடியும்.
“கார்சீரா” என்னும் பூச்சிகள் மூலம் டிரைகோகிரம்மா ஜப்பானிகா என்ற முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து வெளிவரும் பூச்சியிலிருந்து ஒட்டுண்ணி என்று அழைக்கப்படும் நுண்ணிய முட்டை கிடைக்கிறது.
இந்த முட்டை ஒரு சி.சி. என்றழைக்கப்படும் ஏழுக்கு 10 என்ற சதுர சென்டி மீட்டர் கொண்ட ஓர் அட்டையில் 15 ஆயிரம் நுண்ணிய முட்டைகளை ஒட்டி கரும்பு நடவு செய்த 4 மாதங்களிலிருந்து 6 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை ஒட்ட வேண்டும்.
மூன்று சி.சி. அட்டைகளை கரும்பு சோகைக்கு இடையில் கட்டி விட்டால் அந்த முட்டைகள் ஒட்டுண்ணிப் பூச்சிகளை உருவாக்கிப் புழுக்களைத் தின்று எஞ்சிய புழுக்களின் உடலில் தன்னுடைய முட்டைகளை ஒட்டி விட்டுச் சென்று விடும். இதனால் புழுக்கள் முற்றிலும் அழிந்து விடும்.
இந்த ஒட்டுண்ணிகளை விவசாயியே உற்பத்தி செய்து, ஒரு அட்டையில் ஒட்டப்படும் ஒரு சி.சி. முட்டையின் விலை வெறும் ரூ.35 மட்டுமே என்று கூறுகிறார். ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு 10 சி.சி. மட்டும் பயன்படுத்தினாலே போதும்.
பசுமைக்கூடம் தொழில்நுட்பம்:
பசுமைக்குடில் என்று ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடி (அ) பாலிதீன் கூரையினால் போர்த்தப்பட்ட அமைப்பாகும். இதில் தேவைக்கு ஏற்றவாறு தட்பவெப்ப நிலைகளை கட்டுப்படுத்தலாம்.
தாவரங்கள் இரவில் வெளியிடுகிற கரியமிலவாயு உட்புறத்திலேயே தங்கி விடுவதால் பகல் நேரத்தில் தாவரத்திற்கு ஒளிச்சேர்க்கைக்கு அதிகப்படியான கரியமிலவாயு கிடைக்கிறது.
எனவே 5 முதல் 10 மடங்கு அதிக அளவில் ஒளிச்சேர்க்கை நடைபெற்று விளைச்சல் அதிகமாகவும், தரமானதாகவும் அமைகிறது. மற்றும் சாகுபடி செய்யப்படும் மண் பரப்பில் இருந்து ஆவியாகும் நீரும் உட்புறத்திலேயே தங்கி விடுவதால் சொட்டுநீர் உரப்பாசனத்தில் சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த அளவு நீர் மற்றும் உரங்கள் மட்டுமே சாகுபடிக்கு தேவைப்படுகிறது.
பசுமைக்கூடத்தில் காய்கறிப் பயிர்கள், தக்காளி, குடைமிளகாய், வெள்ளரி, பீன்ஸ் மற்றும் கீரை வகைகள் போன்வற்றை சாகுபடி செய்யலாம்.