நீர் பற்றாக்குறை காலங்களிலும், வறட்சியான காலங்களிலும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கவும் மாற்றுப்பயிர் சாகுபடியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
மாற்றுப் பயிர்களின் நோக்கம்
1.. அதிக நீர் தேவையுள்ள நீண்டகால பயிர்களை பயிரிடாமல் தவிர்த்தல்.
2.. நிலத்திற்கு மண்வளர் சேர்க்கும் பயிர்களை பயிரிடுதல்.
3.. குறைந்த வயதுடைய உயர் விளைச்சல் இரகங்களை பயிரிடுதல்.
4.. மாற்றுப்பயிர்கள் குறுகிய வயதினைக் கொண்டதாகவும், அதிக அளவு சல்லி வேர்கள் கொண்டதாகவும், வறட்சியை தாங்கி வளரக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
பருவத்திற்கேற்ற மாற்றுப்பயிர்கள்
கோடை:
எள், பயறு, கம்பு, நிலக்கடலை, சோளம்.
குறுவை:
மக்காச்சோளம், பயறு, சோளம், நிலக்கடலை, ராகி.
சம்பா, தாழைப்பருவத்திற்கு ஏற்ற பயிர்கள்:
நிலக்கடலை, பயறு, எள், காய்கறிகள்.