1.. கற்றாழை
உணவு, மருந்து, அழகு சாதனப் பொருள்… மூன்றாகவும் பயன்படும் மூலிகை கற்றாழை. நல்ல சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் நீர் ஊற்றினால் போதும். இதில் மனித உடலுக்குத் தேவையான 18 வகை அமினோ அமிலங்கள் உள்ளன. கற்றாழை ஜூஸை தயார் செய்த மூன்று மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். இரவு நேரத்தில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சைனஸ் பிரச்னை நீங்கும்; ரத்த அழுத்தம், வயிற்றுக்கோளாறுகளுக்கு சிறந்த மருந்து.
undefined
2.. ஆடாதொடா
ஆடாதொடா என்றும் ஆடு தொடா என்றும் அழைக்கப்படும் செடியின் நுனியில் இருந்து மூன்றாவது கணுவை எடுத்து தொட்டியில் நட்டுவைத்தால், வளரும். சளி, இருமல் அதிகம் உள்ளவர்கள் சிறிதளவு இந்த இலைகளை எடுத்து அரை டீஸ்பூன் சீரகம், 8 முதல் 10 மிளகு சேர்த்து 4 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி மூன்று நாள், இரண்டு வேளை சாப்பிட்டு வர… நல்ல பலன் கிடைக்கும்.
3.. முருங்கை
மல்டி விட்டமின் செடி என்று சொல்லும் அளவுக்கு, சத்து நிறைந்தது தவசி முருங்கை. 16 அடி வரை வளரும் தன்மைகொண்ட இதை, மொட்டைமாடியில் தொட்டியில் 5 அடி வரை வளர்க்கலாம். நீளமாக வளர விடாமல் 2 அல்லது 3 அடியில் வெட்டிவிடலாம். வெட்டியது பக்கத்தில் கிளை விடும். விட்டமின் குறைபாடு உள்ளவர்கள், இந்த இலையை பருப்பு போட்டு சமைத்து சாப்பிட்டு வர, பலன் கிடைக்கும்.
4.. சிறியாநங்கை
சிறியாநங்கை அதிகபட்சமாக இரண்டு அடி உயரம்தான் வளரும். சூரிய ஒளி மற்றும் நிழல் என இரண்டும் கிடைக்கும் இடத்தில் இதை வளர்க்கலாம். ஜுரம் வந்தால், இதை வேரோடு கழுவி, 4 கப் தண்ணீரில் 2 – 3 மிளகு சேர்த்து கொதிக்கவிட்டு, ஒரு கப்பாக வற்றும்படி காய்ச்சிக் குடிக்கலாம். பூச்சிக் கடி, வண்டுக் கடி, கம்பளிப்பூச்சிக் கடி போன்றவற்றை இந்தக் கஷாயம் குணமாக்கும்.
5.. சீந்தில் கொடி
இந்தச் செடியைப் பிடுங்கிப் போட்டால்கூட அந்த இடத்தில் வேர்விட்டு வளரும் என்பதால், ‘சாகா மூலிகை’ என்ற சிறப்புப் பெயர் பெற்றது. இது சீராக வளராது என்பதால், ஒரு தனி இடத்தில் வைத்து வளர்க்கலாம். தொட்டியில் வளர்க்கும்போது சின்னச் சின்ன மூங்கில் குச்சிகளை குறுக்கும் நெடுக்குமாக ஊன்றி, அதன் மேல் இந்தச் செடியைப் பரவவிடலாம்.
இதன் இலையும், தண்டும்தான் மருந்து. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், இதன் இலையை நிழலில் காய வைத்து பொடியாக்கி, தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பொடியைக் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.