கால்நடைகளில் செயற்கைக் கருவூட்டலின்போது உன்னிப்பாக கவனிக்க வேண்டியவை:
** பசுவில் ஊசி செலுத்துவதற்கு நன்கு பயிற்சி பெற்ற திறமையான நபர் வேண்டும். சினை ஊசி போடுபவர் சரியாக கருப்பையினுள் விந்தணுவை செலுத்தாவிட்டால் மாடு சினை பிடிக்காது. எனவே முறையான பயிற்சியின்றி செய்தால் அது பயனற்றதாகிவிடும்.
** பழங்காலத்தில் பின்பற்றி வந்த செயற்கைக் கருவூட்டல் முறைகள் இயற்கை முறை போன்றே இருந்தன. இதற்கு நிறைய விந்துணுக்கள் தேவைப்பட்டன. எனவே சினைப் பை முறை முழுமையான பலன் தரவில்லை.
** பின்பு வந்த குடுவை முறையிலும் உபகரணங்கள் சரியாக சுத்தம் செய்யப்பட்டிருக்காவிடில், சரியான பலன் கிட்டவில்லை. இறுதியில் இப்போது மலப்புழை வழியே சினைப்பையில செலுத்தும் முறையே நன்கு பயன் தருகிறது.
** மலப்புழை வழியே சினைப்பைக்குள் செலுத்தும் முறை நன்கு சுத்தம் செய்யப்பட்ட வடிகுழாயில் குளிர்விக்கப்பட்டு உறைநிலை குறைந்த விந்துக்களை வைத்து சினைப்பைக்குள் செலுத்தப்படுகிறது.
** அவ்வாறு செலுத்தம்போது செலுத்துபவர் கண்டிப்பாக உறை அணிந்திருக்க வேண்டும். அவர் அந்த வடிகுழாயை கவனமாக உருண்டையான மடிப்புகள் வழியே எடுத்துச் சென்றபின், அக்குழாயானது கருப்பையின் கழுத்துப்பகுதியை அடைகிறது. விந்தணுக்களை கவனமாக வெளியேற்ற வேண்டும்.
** சில விந்தணுக்கள் கருப்பையினுள்ளும் சில கழுத்துப்பகுதியிலும் விழுமாறு கவனமாக வெளியேற்ற வேண்டும். கருப்பையின் அளவு சிறியதாக இருப்பதால் உள்ளே அதிகம் செலுத்தி ஏதும் காயம் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுதல் நலம்.
** அதே சமயம் விந்துக்கள் வடிகுழாயிலேயே தங்கிவிடக்கூடாது. ஏற்கெனவே ஒரு முறை கருவூட்டல் செய்த மாடுகளுக்குச் சினைப் பிடிக்க சந்தர்ப்பம் இருப்பதால் வடிகுழாயை மிகவும் உட்செலுத்தக்கூடாது.
** இம்முறை சிறிது கடினமாக இருந்தாலும் முறையாகப் பயிற்சி பெற்றபின் செய்வதானால் பிற முறைகளை விட அதிக பலன் தரக்கூடியது. அதே நேரம் சரியான சுகாதார முறைகளையும் மேற்கொள்ளவேண்டும்.