உப்பு மண் பகுதிகளிலும் இனி பயிரினை நன்றாக வளர்க்க முடியும்…

 |  First Published Dec 24, 2016, 12:34 PM IST



இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் புதிய விவசாய தகவலினை அளித்துள்ளனர். இதன் மூலம் உப்பு மண் பகுதிகளிலும் இனி பயிரினை நன்றாக வளர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் குறு விளைநில விவசாயிகள் அதிக இலாபம் பெற வழி வகுக்கும். இந்த மண் வகைகளுக்கு ஏற்ற பயிர் விதைகளை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Latest Videos

undefined

விஞ்ஞானிகள் கண்டறிந்த பயிர் விதை உப்பு நீரினை உறிஞ்சி வேர்களுக்கு நல்ல தண்ணீரை சுத்திகரித்து அனுப்புகிறது. இதனால் தாவரம் நன்றாக வளருகிறது. ஆனால் சில தாது உப்புகள் தாவரங்களுக்கு நஞ்சு விளைவிக்கக்கூடும்.

இதனை கட்டுப்படுத்தவே தற்போது விஞ்ஞானிகள் புதிய தாவர விதையினை அறிமுகப்படுத்தியுள்ளனர். பெரும்பாலும் களர் மண்ணில் அதிக சோடியம், குளோரைடு, கால்சியம் குளோரைடு, அல்லது மெக்னீசியம் சல்பேட் கரையக்கூடிய உப்புக்கள் உயர் செறிவு அதிகம் இருப்பதால் தாவரத்திற்கு அதிக நன்மை ஏற்படுகிறது.

தற்போது ஆய்வாளர்கள் அனைத்து வகை மண்ணிலும் வளரும் புல் விதையினை கண்டறிந்துள்ளனர். இது மண்ணின் தரத்தினை ஒரே சீராக வைத்துக்கொள்ள அதிக அளவு உதவுகிறது.

குறிப்பாக மூன்று புல்வெளி இனங்களான cord grasses, pc 17-102, pc 17-109 போன்றவை உவர் நிலத்தில் நன்கு வளரும் ஆற்றல் கொண்டது. இ.ஜி.-1102, உயர் உப்பு நிலைமைகளுக்கு பொருந்தும்.

மேலும், இந்த வகை புல் 70 முதல் 80 சதவீதம் வரை தாவர வளர்ச்சியினை அதிகரிக்கிறது. மேலும் இது வளிமண்டலத்திற்கும் அதிக பாதுகாப்பினை கொடுக்கிறது.

தாவரங்கள் அழமான வேரினை ஊன்றுவதற்கு புதிய புல் வகை உதவுகிறது. Cord grass மண்ணில் உள்ள உப்பு தன்மையினை உறிஞ்சுவதால் மண் வளமாகிறது.

உப்பு நிலத்தில் நல்ல விளைச்சலினை பெற வேண்டுமெனில் ஏக்கருக்கு 8 அல்லது 9 டன் உப்பு தன்மையினை உறிஞ்சும் புல் வகை தேவைப்படும்.

click me!