வாழையை அறுவடை செய்தபிறகு அவற்றில் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மைகள் இதோ…

 |  First Published Oct 9, 2017, 12:21 PM IST
After harvesting banana



வாழையினை சற்று குளிரான பகுதிகளில் ஒரு வாரம் வரை சேமித்து வைக்கலாம். வாழைக்காய் பழுக்கும் முன்பு குளிர்சாதனப் பெட்டியினுள் வைப்பதால், அதன் பழுக்கும் திறன் பாதிக்கப்படும்.

வாழைக்காயின் பச்சை நிறம் மாறி பழுக்க ஆரம்பித்த பின் ஒரு வாரம் வரை மட்டுமே சேமித்து வைக்கமுடியும். வாழைக்காய்/பழங்களை 13 முதல் 14 செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைப்பது சிறந்தது.

Tap to resize

Latest Videos

குலைகளை எப்போதும் ஒளி அற்ற பகுதியில் சேமித்து வைக்கவேண்டும். இல்லையென்றால், காய்கள் எளிதில் பழுத்து, மென்மை தன்மையை அடைந்துவிடும். ஏற்றுமதி செய்யும் வாழைக்காய்களை 4-16 காய்கள் சீப்புகளாக வெட்டி, அதன் நீள, அகலங்களை சரி பார்த்துப் பின், ஏற்றுமதித் தேவைக்கேற்ப 12-18 கிலோ கொள்ளளவு பொண்ட பாலித்தீன் உறையிடப்பட்ட பெட்டிகளில் அடுக்கி வைக்கவேண்டும்.

இவ்வாறு பெட்டியில் அடைக்கும் முன்பு அதன் மெழுகுத் தன்மையைப் போக்க நீர் அல்லது நீர்த்த சோடியம் ஹைப்போகுளோரைடில் சுத்தம் செய்து பின் தையோபெண்டலோஸ் கொண்டு நேர்த்தி செய்வது அவசியம்.

சுத்தம் செய்தல்:

குலையிலருந்து சீப்புகளை வெட்டி எடுத்த பின்பு, அவைகளை ஓடும் நீரில் கழுவுவதன் மூலம், அதன் மேல் ஒட்டியுள்ள மெழுகுத் தன்மையினை நீக்கலாம். இதனால் பழங்களின் தோற்றம் நன்றாக இருக்கும். பின் காய்களை திறந்த வெளியில் சற்று உலர்த்தி குளிர்விக்கும் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

தரம் பிரித்தல்:

சீப்புகள் அதில் உள்ள காய்களின் எண்ணிக்கை மற்றும் அளவினைப் பொறுத்துப் பிரிக்கப்படுகிறது. அதிகம் பழுத்து, அடிபட்ட பழங்கள் இங்கு நீக்கப்படுகின்றன. பின்பு இவை உள்ளூர் சந்தைகளுக்குக் குலையாகவே அனுப்பப்படுகின்றது.

மூட்டை கட்டுதல்:

வாழை குலைகளை படுக்க வைத்தோ, நிற்க வைத்தோ உலர்ந்த வாழை இலைகளை வைத்து சுற்றி வைக்கலாம். குலைகளுக்கு இடையில் பஞ்சு போன்ற அட்டைகளை வைப்பதால் எடுத்துச் செல்லும் போது காய்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நசுங்குவது தடுக்கப்படுகிறது.

ஏற்றுமதி செய்யப்படும் வாழைகளில் கொண்ணையிலிருந்து சீப்புகள் மற்றும் காய்களை வெட்டி எடுத்து பாலித்தீன் வரிகளுடன் கூடிய துளையிடப்பட்ட பெட்டிகளில் வைத்து பேக் செய்யப்படுகின்றது. காயின் வளைந்த பகுதி மேல் நோக்கிய வகையில் மேலே உள்ள காய்கள் அடியில் உள்ளவற்றை நசுக்காவண்ணம் பார்த்து அடுக்கவேண்டும்.

400 காஜ் குறைந்த அடர்த்தி கொண்ட பாலித்தீன் பைகளில் காற்றோட்டம் கொண்டோ அல்லது இல்லாமலோ சாதாரண வெப்பநிலையிலோ அல்லது 13 செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருப்பதன் மூலம் இதன் சேமிப்புக் காலம் அதிகரிக்கும்.

வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்:

ஜிப்பரல்லிக் அமிலம் 150 பி.பி.எம். (150 மி.கி./1 லி. நீரில்) + பினோமைல் 500 பி.பி.எம்.(500 மி.கி. 1 லி. நீரில் கலந்தது) _ வேக்ஸால் 6% கலவையை வாழைக் காய்களின் மீது தெளிப்பதால் குளிர் பதன அறையில் 14 நாட்கள் வரை பழுக்காமல் வைத்திருக்கலாம்.

வாழைக் காய்களை ஜிப்பரல்லிக் அமிலம் 500 பி.பி.எம்.+ சிட்டின் 2 பி.பி.எம்.(2 மி.கி. 1 லி. நீரில் கலந்தது) என்ற வளர்ச்சி ஊக்கிகளில் நனைத்து எடுத்தால் பழுக்கும் திறன் தாமதப்படுத்தப்படுவதோடு, சேமிப்புக் காலமும் அதிகரிக்கின்றது.

காய்கள் விரைவில் பழுக்க வைக்க எத்திரல் 5000 பி.பி.எம்.(5 மி.லி. / லிட்டர் நீர்) சோடியம் ஹைட்ராக்ஸைடு உருண்டைகள் கலந்த மருந்தினைத் தெளிக்கலாம்.

சேமித்து வைத்தல்:

வாழைக்காய்களை காற்றுப் புகாத பாலித்தீன் பைகளில் இட்டு குறைந்த வெப்பநிலையில் வைத்திருப்பதால் அதன் சேமிப்புக் காலத்தினை அதிகரிக்கலாம். 90 – 95% ஒப்பு ஈரப்பதமும், 13.5 செ. வெப்பநிலையும் கொண்ட குளிர் பதன அறையில் காய்கள் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் காய்கள் பழுக்காமல் 20 நாட்கள் வரை இருக்கும்.

வாழைக்காய்களின் எத்திலீன் அடர்வு நிலை 1 பி.பி.எம்.- க்கு கீழே அருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். முற்றிய வாழைகளை எத்திலீன் இல்லாத காற்றில் 3 வாரங்கள் வரையிலும், கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் 14செ. வெப்பநிலையில் 6 வாரங்கள் வரையிலும் வைத்திருக்கலாம்.

click me!