செம்மறி ஆடுகளை நோய்த் தாக்குதலில் இருந்து தடுக்கும் நடவடிக்கைகள்  ஒரு அலசல்...

 |  First Published Dec 7, 2017, 1:36 PM IST
A step by step to prevent sheep from being infected ...



செம்மறி ஆடுகளை நோய்த் தாக்குதலில் இருந்து தடுக்க 

நச்சுயிரி நோய்களான ஆட்டம்மை, கால்வாய்க் கோமாரிகளைத் தடுப்பூசி போட்டு நோய் வராமல் காத்துவிடலாம். 

நுண்ணுயிர் நோய்களான துள்ளுமாரி அடைப்பான், சப்பை நோய், தொண்டை அடைப்பான் போன்ற நோய்களை அந்தந்த நோய்களுக்கான தடுப்பூசி போட்டு நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

அக ஒட்டுண்ணி நோய்களுக்கு முறையான குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். 

ஆண்டிற்கு 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் குடற்புழு நீக்க மருந்துகளை மாற்றி கொடுக்க வேண்டும். 

புற ஒட்டுண்ணிகளை நீக்க மருந்து கலந்த நீரில் ஆடுகளை முக்கி எடுத்து நீக்கலாம். அல்லது மருந்து கலந்த நீரை ஆட்டின்மீது தெளித்து நீக்கலாம்.

ஊட்டச்சத்து குறைவு நோய்களை வைட்டமின் நிறைந்த தாது உப்பைக் கொடுத்து பராமரித்து கட்டுப்படுத்தலாம். 

செம்மறி ஆடுவளர்ப்பு பற்றி விபரங்களுக்கு சேலம் சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை பராமரிப்பு உதவி பேராசிரியை அவர்களை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம். 

click me!