எக்டருக்கு 6 டன் மகசூல் தரும் நெல் இரகம்…

 |  First Published Dec 22, 2016, 12:18 PM IST



தற்போதைய பருவத்தில் டிகேஎம் 13 இரக நெல்லைப் பயிரிட்டால் எக்டேருக்கு 6 டன் மகசூல் கிடைக்கும்.

திருவள்ளூரை அடுத்த திரூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் நெல் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு டிகேஎம் 13 என்ற நெல் இரகம் வெளியிடப்பட்டது. இந்த இரகமானது பிபிடி 5,204 இரகத்துக்கு மாற்று இரகமாகும். இதன் வயது 130 நாள்களாகும்.

இது காவிரி டெல்டா பகுதியில் தாளடிப் பட்டத்துக்கும் (செப்டம்பர் விதைப்பு) இதர மாவட்டங்களுக்கு சம்பா பட்டத்துக்கும் (ஆகஸ்ட்- செப்டம்பர்) விதைப்பு ஏற்றது.

இது எக்டேருக்கு 5,938 கிலோ மகசூல் கொடுக்க வல்லது. மத்திம, சன்ன இரக வெள்ளை அரிசியைக் கொண்டது.

அதிக அரைவைத் திறன், முழு அரிசி காணும் திறன், சிறந்த சமையல் பண்புகளுடன், நல்ல சுவையும் கொண்டது இந்த நெல்.

இது இலைச் சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி, பச்சை தத்துப்பூச்சி, குலைநோய், செம்புள்ளி நோய், இலை உறை அழுகல் நோய்களுக்கு நடுத்தர எதிர்ப்புத்திறன் கொண்டது. நெல்கதிர் சாயாத தன்மை கொண்டது.

இந்த டிகேஎம் 13 நெல் இரகத்தின் விதையானது திரூர், நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 4 டன் இருப்பு உள்ளது. இதன் விலை கிலோ ரூ. 30 ஆகும்.

click me!