Asianet News TamilAsianet News Tamil

Loksabha Election 2024 உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? அனைத்து தொகுதிகள் விவரம்!

மக்களவைத் தேர்தல் 2024இல் உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என ஒரே க்ளிக்கில் தெரிந்து கொள்ளுங்கள்

Who are the candidates contesting in your constituency in Loksabha Election 2024 Details of all constituencies in tamilnadu smp
Author
First Published Mar 26, 2024, 11:37 AM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல், தனித்து களம் காண்கிறது. அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி விட்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. திமுக கூட்டணியில் உள்ள மக்கல் நீதி மய்யத்துக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் உள்ளன. பாஜக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கும் (ஓபிஎஸ் அணி), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், ஐஜேகே, புது நீதிக் கட்சி ஆகியவை உள்ளன.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் 2024இல் உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கன்னியாகுமரி
காங்கிரஸ் - விஜய் வசந்த்
பாஜக - பொன் ராதாகிருஷ்ணன்
அதிமுக - பசிலியான் நசரேத்
நாம் தமிழர் - மரிய ஜெனிபர்

திருநெல்வேலி
காங்கிரஸ் - ராபர்ட் ப்ரூஸ்
பாஜக - நயினார் நாகேந்திரன்
அதிமுக - ஜான்சி ராணி
நாம் தமிழர் - பா.சத்யா

தென்காசி
திமுக - ராணி ஸ்ரீகுமார்
தமமுக - ஜான் பாண்டியன்
புதிய தமிழகம் - கிருஷ்ணசாமி
நாம் தமிழர் - இசை மதிவாணன்

தூத்துக்குடி
திமுக - கனிமொழி
தமாகா - விஜயசீலன்
அதிமுக - சிவசாமி வேலுமணி
நாம் தமிழர் - ரொவினா ருத்ஜேன்

மக்களவைத் தேர்தல் 2024: திருச்சி தொகுதி - கள நிலவரம் என்ன?

இராமநாதபுரம்
ஐயுஎம்எல் - நவாஸ்கனி
ஓபிஎஸ் அணி - ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக - ஜெயபெருமாள்
நாம் தமிழர் - சந்திரபிரபா ஜெயபால்

விருதுநகர்
காங்கிரஸ் - மாணிக்கம் தாக்கூர்
பாஜக - ராதிகா சரத்குமார்
தேமுதிக - விஜய பிரபாகர்
நாம் தமிழர் - கெளசிக்

தேனி
திமுக - தங்க தமிழ்செல்வன்
அமமுக - TTV.தினகரன்
அதிமுக - நாராயணசாமி
நாம் தமிழர் - மதன் ஜெயபால்

மதுரை
மா.கம்யூனிஸ்ட் - வெங்கடேசன்
பாஜக - ராம சீனிவாசன்
அதிமுக - சரவணன்
நாம் தமிழர் - சத்யா தேவி

சிவகங்கை
காங்கிரஸ் - கார்த்தி சிதம்பரம்
இ.ம.க.மு.க - தேவநாதன் யாதவ்
அதிமுக - சேவியர் தாஸ்
நாம் தமிழர் - எழிலரசி

தஞ்சாவூர்
திமுக - முரசொலி
பாஜக - முருகானந்தம்
தேமுதிக - சிவநேசன்
நாம் தமிழர் - ஹூமாயின் கபீர்

நாகப்பட்டினம்
இ.கம்யூனிஸ்ட் - செல்வராஜ்
பாஜக - ரமேஷ்
அதிமுக - சுர்ஜித் சங்கர்
நாம் தமிழர் - கார்த்திகா

மயிலாடுதுறை
காங்கிரஸ் - இன்னும் அறிவிக்கப்படவில்லை
பாமக - ஸ்டாலின்
அதிமுக - பாபு
நாம் தமிழர் - காளியம்மாள்

மக்களவைத் தேர்தல் 2024: மதுரை தொகுதி - கள நிலவரம் என்ன?

சிதம்பரம்
விசிக - தொல் திருமாவளவன்
பாஜக - கார்த்தியாயினி
அதிமுக - சந்திரஹாசன்
நாம் தமிழர் - ஜான்சிராணி

கடலூர்
காங்கிரஸ் - விஷ்னு பிரசாத்
பாமக - தங்கர் பச்சான்
தேமுதி - சிவக்கொழுந்து
நாம் தமிழர் - மணி வாசகன்

பெரம்பலூர்
திமுக - அருண் நேரு
ஐ.ஜே.கே - பாரிவேந்தர்
அதிமுக - சந்திரமோகன்
நாம் தமிழர் - தேன்மொழி

திருச்சிராப்பள்ளி
மதிமுக - துரை வைகோ
அமமுக - செந்தில்நாதன்
அதிமுக - கருப்பையா பன்னீர்செல்வம்
நாம் தமிழர் - ஜல்லிக்கட்டு ராஜேஷ்

கரூர்
காங்கிரஸ் - ஜோதிமணி
பாஜக - செந்தில்நாதன்
அதிமுக - தங்கவேல்
நாம் தமிழர் - கருப்பையா

திண்டுக்கல்
மா.கம்யூனிஸ்ட் - சச்சிதானந்தம்
பாமக - திலகபாமா
எஸ்.டி.பி.ஐ - முபாரக்
நாம் தமிழர் - கைலைராஜன் துரைராஜன்

பொள்ளாச்சி
திமுக - ஈஸ்வரசாமி
பாஜக - வசந்தராஜன்
அதிமுக - அப்புசாமி கார்த்திகேயன்
நாம் தமிழர் - சுரேஷ்குமார்

கோயம்புத்தூர்
திமுக - கணபதி ராஜ்குமார்
பாஜக - அண்ணாமலை
அதிமுக - சிங்கை ராமச்சந்திரன்
நாம் தமிழர் - கலாமணி ஜெகநாதன்

நீலகிரி
திமுக - ஆ.ராசா
பாஜக - எல்.முருகன்
அதிமுக - லோகேஷ்
நாம் தமிழர் - ஜெயக்குமார்

திருப்பூர்
இ.கம்யூனிஸ்ட் - சுப்பராயன்
பாஜக - ஏ.பி.முருகானந்தம்
அதிமுக - அருணாச்சலம்
நாம் தமிழர் - சீதாலட்சுமி

ஈரோடு
திமுக - பிரகாஷ்
தமாகா - விஜயகுமார்
அதிமுக - ஆற்றல் அசோக்குமார்
நாம் தமிழர் - கார்மேகன்

நாமக்கல்
கொமதேக - மாதேஷ்வரன்
பாஜக - கே.பி.ராமலிங்கம்
அதிமுக - தமிழ்மணி
நாம் தமிழர் - கனிமொழி

சேலம்
திமுக - செல்வகணபதி
பாமக - அண்ணாத்துரை
அதிமுக - விக்னேஷ்
நாம் தமிழர் - மனோஜ்குமார்

கள்ளக்குறிச்சி
திமுக - மலையரசன்
பாமக - தேவதாஸ் உடையார்
அதிமுக - குமரகுரு
நாம் தமிழர் - இயக்குனர் ஜெகதீசன்

விழுப்புரம்
விசிக - ரவிக்குமார்
பாமக - முரளி சங்கர்
அதிமுக - பாக்கியராஜ்
நாம் தமிழர் - இயக்குனர் களஞ்சியம்

ஆரணி
திமு - தரணி வேந்தன்
பாமக - கணேஷ்குமார்
அதிமுக - கஜேந்திரன்
நாம் தமிழர் - பாக்கியலட்சுமி

திருவண்ணாமலை
திமுக - அண்ணாத்துரை
பாஜக - அஸ்வத்தாமன்
அதிமுக - கலியபெருமாள்
நாம் தமிழர - ரமேஷ் பாபு

தருமபுரி
திமுக ஆ.மணி
பாமக - செளமியா அன்புமணி
அதிமுக - அசோகன்
நாம் தமிழர் - அபிநயா

கிருஷ்ணகிரி
காங்கிரஸ் - கோபிநாத்
பாஜக - நரசிம்மன்
அதிமுக - ஜெயப்பிரகாஷ்
நாம் தமிழர் - வித்யா வீரப்பன்

வேலூர்
திமுக - கதிர் ஆனந்த்
புதியநீதிக் கட்சி - ஏ.சி.சண்முகம்
அதிமுக - பசுபதி
நாம் தமிழர்-மகேஷ் ஆனந்த்

அரக்கோணம்
திமுக - ஜெகத்ரட்சகன்
பாமக - கே.பாலு
அதிமுக - விஜயன்
நாம் தமிழர் - அப்சியா நஸ்ரின்

காஞ்சிபுரம்
திமுக - செல்வம்
பாமக - ஜோதி வெங்கடேஷ்
அதிமுக - ராஜசேகர்
நாம் தமிழர் - சந்தோஷ்குமார்

ஸ்ரீபெரும்புதூர்
திமுக - டி.ஆர்.பாலு
தமாகா - வேணு கோபால்
அதிமுக - பிரேம்குமார்
நாம் தமிழர் - ரவிச்சந்திரன்

மத்திய சென்னை
திமுக - தயாநிதி மாறன்
பாஜக - வினோஜ் செல்வம்
தேமுதிக - பார்த்தசாரதி
நாம் தமிழர் - கார்த்திகேயன்

தென் சென்னை
திமுக - தமிழச்சி தங்கப்பாண்டியன்
பாஜக - தமிழிசை செளந்தரராஜன்
அதிமுக - ஜெயவர்தன்
நாம் தமிழர் - தமிழ்செல்வி

வட சென்னை
திமுக - கலாநிதி வீராச்சாமி
பாஜக - பால் கனகராஜ்
அதிமுக - இராயபுரம் மனோ
நாம் தமிழர் - அமுதினி

திருவள்ளூர்
காங்கிரஸ் - சசிகாந்த் செந்தில்
பாஜக - பாலகணபதி
தேமுதிக - நல்லதம்பி
நாம் தமிழர் - ஜெகதீஸ் சந்தர்

புதுச்சேரி
காங்கிரஸ் - வைத்திலிங்கம்
பாஜக - நமச்சிவாயம்
அதிமுக - தமிழ்வேந்தன்
நாம் தமிழர் - மேனகா

Follow Us:
Download App:
  • android
  • ios