Asianet News TamilAsianet News Tamil

எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் சொதப்பி வருகிறது: ஜெயக்குமார்

கோவை மக்களவை தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டு காணவில்லை என அண்ணாமலை கூறுவது கிணற்றை காணவில்லை என வடிவேல் கூறுவது போல உள்ளது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Election Commission is becoming more corrupt than ever: D Jayakumar sgb
Author
First Published Apr 23, 2024, 6:20 PM IST

எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் சொதப்பி வருகிறது என்றும் தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டாதாக தெரியவில்லை என்றும் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சென்னை நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள நாடாளுமன்ற தொகுதிகளை சார்ந்த வேட்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, பொன்னையன் உள்ளிட்ட சென்னை மற்றும் சுற்றியுள்ள தலைமை கழகச் செயலாளர்களும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்தித்து பேட்டி அளித்தார்.

வெளியுறவுக் கொள்கையில் வாக்கு வங்கி அரசியல்: அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: 

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு  முழுவதும் ஒரு எழுச்சியாக அலை கண்டறியப்பட்டது , மகத்தான வெற்றியை ஜூன்4 ம் தேதி தமிழக மக்கள் எங்களுக்கு அளிக்கின்ற நிலை உள்ளது. சென்னை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்தித்தார்கள் மேலும் சில விவரங்களை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் தோல்வியாக இந்த தேர்தலை சொல்லலாம். வாக்காளர்களின் எதிர்பார்ப்பின் பூர்த்தி செய்வது தான் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. 100 சதவீதம் வாக்குகளை பெறவேண்டும் என பல்வேறு முறை தெளிவாக அறிவுறுத்தப்பட்டது ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல் இந்த தேர்தல் பணிகள் நடைபெற்றன 

தேர்தல் முடிந்த பிறகு இயல்பாக தேர்தல் வாக்குபதிவு குறித்து அட்டவணை வெளியிடப்படும் கடந்த முறை 2-3 சதவீதம் தவறுதலாக வருவது இயல்பு ஆனால் இந்த முறை 7-8 சதவீதம் தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் கைவிட்டுள்ளது, வாக்களிக்க முடியாவதர்கள் அவர்களது ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டது என்பதே உண்மையாகும்.

 மத சார்பு அரசியலை தவிர்க்க வேண்டும் , வெறுப்பு அரசியல் இருக்க கூடாது , பிரதமராக இருக்கும் பொழுது அனைவருக்கும் அவர் பிரதமர் அப்படி இருக்கும் போது சிறுபான்யினரை இழிவு படுத்தும் வகையில் அவரது பேச்சு உள்ளது. அவர் பேசியது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று 

சசிகலா அதிமுக சின்னத்தை வைத்து அளித்த கடிதம் வெற்று காகிதத்திற்கு சமம். சசிகலா, ஓ.பி.எஸ். யாரும் அரசியலில் இல்லை. 2026ஆம் ஆண்டு தேர்தலில் அவர்கள் அரசியலை விட்டு வெளியேறுவது  உறுதி"

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

'கேரள மக்கள் காங்., இடதுசாரிகள் மீது கோபமாக இருக்கிறார்கள்': அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சிறப்புப் பேட்டி

Follow Us:
Download App:
  • android
  • ios