Asianet News TamilAsianet News Tamil

நயினார் நாகேந்திரனுக்கு சிக்கலா? நெல்லை தேர்தல் நடக்குமா? ரத்தாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

 வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், அவரின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை  விதிக்க வேண்டும். 

Petition against Nainar Nagendran dismissed...Chennai High Court tvk
Author
First Published Apr 16, 2024, 11:25 AM IST

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிங்க: இனிமே தான் வெயிலின் ஆட்டமே இருக்கு.. ஜாக்கிரதையா இருங்க.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை..

Petition against Nainar Nagendran dismissed...Chennai High Court tvk

அதில்,  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், அவரின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை  விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு நிராகரிக்கப்படுமா, நெல்லை தொகுதி தேர்தல் நிறுத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதையும் படிங்க:  School College Holiday: குட்நியூஸ்.! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

Petition against Nainar Nagendran dismissed...Chennai High Court tvk

இதனையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாக்குப்பதிவை தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் என தலைமை நீதிபதி கூறியதை அடுத்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios